மனைவியை பிரிந்து செல்ல கருவாடு கேட்ட நபர்! குழப்பத்தில் பொலிஸார்! இறுதியில் நடந்த விநோத சம்பவம்

Report
598Shares

இலங்கையில், கண்டி - கட்டுகஸ்தொட்டை பிரதேசத்தில் இரகசிய மனைவியை பிரிவதற்காக 250 கிராம் கருவாடு கேட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

53 வயதான பெண் ஒருவரிடமே இவ்வாறு கருவாடு கேட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில் அவர் வேறு ஒருவருடன் இரகசிய உறவை தொடர்ந்துள்ளார்.

எனினும் குறித்த ஆண் நபர் மீது பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவரை பிரிந்து தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று கொண்டு வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் அவரை பிரிய விரும்பாத நபர் இந்த பெண்ணின் புதிய வீட்டிற்கு அவரை தேடி வந்துள்ளார். அத்துடன் அவருடன் தொடர்ந்து வாழ வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை விரும்பாத பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய இந்த முறைப்பாட்டை விசாரணைக்கு எடுத்து கொண்ட பொலிஸார் இருவரும் பிரிய வேண்டும் எனவும், இருவரும் வழங்கிய பொருட்கள் ஏதாவது இருந்தால் அதனை மீளவும் வழங்கி விடுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த பெண் தனக்கு 250 கிராம் கருவாடு வழங்க வேண்டும் என குறித்த நபர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய 250 கருவாடு பெற்றுக் கொடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

18661 total views