மனை­வியை அச்­சு­றுத்த சவப்­பெட்­டிக்கு முற்­ப­ணம் செலுத்­திய கண­வன்!!

Report
94Shares

மனை­வியை அச்­சு­றுத்­தும் நோக்­கில் சவப்­பெட்­டியை வீட்­டுக்கு அனுப்பி வைக்­கு­மாறு நபர் ஒரு­வர் கோரி­யுள்­ளார். குளி­யாப்­பிட்டி நக­ரில் இந்த விநோ­தச் சம்­ப­வம் பதி­வா­கி­யுள்­ளது.

நடுத்­தர வய­து­டைய ஆண் ஒரு­வர் மலர்ச்­சா­லைக்கு சென்று சவப்­பெட்­டி­க­ளின் விலை­களை விசா­ரித்­துள்­ளார். ஏனைய அலங்­கா­ரங்­கள், பெரிய பித்­தளை விளக்கு என்­பன தேவையா என்று மலர்ச்­சா­லை­யின் முகா­மை­யா­ளர் வின­வி­யுள்­ளார்.

அதன்­போது இல்லை எனக்கு சவப்­பெட்டி மட்­டும் போதும் என்று குறித்த நபர் பதி­ல­ளித்­துள்­ளார். சவப்­பெட்­டியை நன்­றாக மெருகூட்டி செய்து தரு­மாறு முகா­மை­யா­ள­ரி­டம் கூறி­யுள்­ளார்.

சவப்­பெட்டி மட்­டும் தேவை­யென்­றால் 18 ஆயி­ரம் ரூபா­வுக்கு வழங்க முடி­யும் என்று முகா­மை­யா­ளர் கூறி­ய­த­னைத் தொடர்ந்து 10 ஆயி­ரம் ரூபா முற்­ப­ண­மாக செலுத்­தி­யுள்­ளார். மாலை 4.00 மணிக்கு சவப்­பெட்­டியை தமது வீட்­டுக்கு அனுப்பி வைக்­கு­மா­றும், மிகு­திப் பணத்தை வீட்­டில் வைத்து தரு­வ­தா­க­வும் குறிப்­பிட்­டுள்­ளார்.

இத­னைக் கேட்ட மலர்ச்­சாலை முகா­மை­யா­ளர் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளார். வெறும் சவப்­பெட்­டி­களை வீடு­க­ளுக்கு அனுப்பி வைக்க முடி­யாது. நீங்­கள் தற்­கொலை செய்து கொள்­ளப் போகின்­றீர்­களா?, என்று முகா­மை­யா­ளர் வின­வி­யுள்­ளார்.

இல்லை, எனது மனை­வியை அச்­சு­றுத்­தவே இந்த பெட்­டியை கொள்­வ­னவு செய்­கின்­றேன், வீட்­டில் எனது அறை­யில் இந்­தப் பெட்­டியை வைத்­துக் கொள்­ளப் போகின்­றேன், எனக்­கூறி மலர்ச்­சா­லையை விட்டு வெளி­யே­றிச் சென்­றுள்­ளார்.

சவப்­பெட்டி வீட்­டுக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வில்லை. மறு­நாள் காலை மலர்ச்­சா­லைக்கு சென்று முற்­ப­ணத்தை மீளப் பெற்­றுக் கொண்­டுள்­ளார். குடி­போ­தை­யில் மனை­வியை அச்­சு­றுத்த இவ்­வாறு சவப்­பெட்­டி­யைக் கொள்­வ­னவு செய்ய முயற்­சித்­துள்­ளார் என்று தெரி­ய­வந்­துள்­ளது.

3424 total views