அனைவருக்கும் விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் பொன், பொருளுடன் சுகபோக வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற ஆசை இருக்கத் தான் செய்யும்.
இதற்கு தாந்த்ரீக பரிகாரம் உள்ளது. இந்த பரிகாரத்திற்கு தேவை ஒரு பழம் மட்டுமே. அது என்ன பழம் தெரியுமா?
அந்த பழத்தை வைத்து நாம் என்ன செய்ய போகிறோம்? இதனால் நமக்கு கிடைக்கப் போகும் நன்மைகள் என்னென்ன? என்பதை இங்கு பார்ப்போம்.
அவை பேரிச்சம்பழம் தான். ஆரோக்கியத்திலும் மற்றும் நல்ல விசேஷமான காரியங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
உடலுக்கு வலிமையை தரும் பேரிச்சை பழம், உள்ளத்திற்கும் வலிமையைத் தருகிறது. அதிலும் இந்த தாந்திரீக பரிகாரத்திற்கு பேரீச்சை பழத்தின் உலர்ந்த பேரிச்சை பழம் பயன்படுத்தப்படுகிறது. உலர்ந்த பேரிச்சை பழம் தான் இந்த பரிகாரத்திற்கு தேவையான பழமாகும்.
மேலும், உலர்ந்த பேரிச்சை பழத்தை பதினொன்று என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அதனை சிகப்பு நிற பட்டுத் துணியில் சதுரமாக வெட்டிக் கொண்டு, அதில் வைத்து கருப்பு நூல் கொண்டு முடிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதை நீங்கள் பீரோவில் வைத்தால் ஆடைகள் அதிகமாக சேரும். விலை உயர்ந்த பொருட்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் வைத்தால் சுகபோக வாழ்க்கை கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதையடுத்து, விலை உயர்ந்த பொருட்கள், நகைகள் போன்றவற்றை வைக்கும் இடங்களில் இதனை வைப்பதால் அவைகள் மேலும் மேலும் பெருகும் என்பது நம்பிக்கை.