ஆடி வெள்ளிக்கிழமையில் திடீர் ராஜயோகம் அடிக்கபோகும் ராசியினர்கள் யார்? இன்றைய ராசிப்பலன்

Report
1176Shares

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். விநாயகர் வழிபாடு நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடினாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும்.

வியாபாரத்தில் வேலையாட்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். வருமானம் அதிகரிக்கும். அம்மன் வழிபாடு நல்லது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்வது நல்லது. பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பிள்ளைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். பைரவர் வழிபாடு நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும். பெருமாள் வழிபாடு நல்லது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் பணப்பிரச்சினைகள் ஏற்படும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை.

உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். எதிர்பாராத பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அம்பிகை வழிபாடு நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் வந்து சேரும்.

வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். விநாயகர் வழிபாடு நல்லது. துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.

உடனிருப்பவர்களுடன் மனஸ்தாபங்கள் தோன்றும். எடுத்த காரியம் வெற்றி பெற பொறுப்புடன் செயல்படுவது நல்லது. சிலருக்கு பூர்வீக சொத்துகளை விற்பதில் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சிவ வழிபாடு நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எந்த செயலையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணம் அனுகூலமான பலன்கள் தரும். பழைய கடன்கள் வசூலாகும். முருகன் வழிபாடு நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீட்டில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். ஆடம்பரத்தை குறைத்து சிக்கம் மேற்கொள்வது நல்லது. சனி பகவான் வழிபாடு நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சற்று கவனமுடன் பழகுவது நல்லது. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். சிவ வழிபாடு நல்லது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது.

குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளி பயணங்களில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.

மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிட்டும். வியாபார ரீதியான பிரச்சினைகள் குறையும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பெருமாள் வழிபாடு நல்லது.