ராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. சிம்ம ராசிக்கு சார்வரி ஆண்டில் காத்திருக்கும் ராஜயோகம்..!

Report
1409Shares

சிம்ம ராசிக்கு நான்காம் இடத்தில் கேதுவும். 10-ல் ராகுவும் அமர உள்ளனர். ஏற்கனவே சனிப்பெயர்ச்சியால் ஓரளவு நல்ல பலன்கள் தான் சிம்ம ராசி பெறுகிறது.

தற்போது ராகு கேதுவும் அமைப்பும் சிறப்பான பலன்களைத் தான் தர உள்ளது.

தொழில்:

கர்மா, தொழில் ஸ்தானத்தில் ராகு அமர உள்ளார். அதே போல் சுக ஸ்தானம், தாயார் ஸ்தானத்தில் கேது அமர உள்ளார்.

ராகுவின் அனுகூலத்தால் இதுவரை தொழில், வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கி, அது விருத்தி ஆகக்கூடிய அமைப்பு இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி கொடுக்கும் அமைப்பு இருக்கும்.

தொழில் தொடங்க நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். இருப்பினும் தேவைக்கேற்ப, உங்களால் திருப்பி செலுத்த முடியும் என்ற நிலை இருந்தால் கடன் வாங்கலாம்.

கேது பகவான் நான்காம் வீடான சுக ஸ்தானத்திற்கு நகர்கிறார். காரிய வெற்றி ஏற்படும். எதிரிகள் தொல்லை நீங்கும். வீடு, வண்டி வாகன யோகம் அமையும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும்.

வம்பு வழக்குகளினால் ஏற்பட்ட பிரச்சினை தீரும். வாழ்க்கை அமைதியாக இருக்கும். சனி பகவான் ஆறாம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகம்,

குரு பகவான் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பது பூர்வ புண்ணியங்களை அள்ளித்தரும் அதுபோல ராகு கேதுவினால் சார்வரி தமிழ் புத்தாண்டில் ராஜயோகம் கிடைக்கப் போகிறது.