ராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. தனுசு ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா?

Report
2181Shares
தனுசு ராசியின் ராகு பெயர்ச்சி:

இதுவரை ராசிக்கு 8-மிடத்தில் இருந்து வந்த ராகுபகவான் மாசி மாதம் 1ஆம் தேதி 7ம் இடத்திற்கு பெயர்ச்சி அடைந்தார். 7ம் இடத்திற்கு பெயர்ச்சி அடையும் ராகுவினால் பொருள் இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. விரும்பியப்படி வாழ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.

மனதில் அவ்வப்போது சஞ்சலமான எண்ணங்கள் தோன்றி மறையும். புதிய நபர்களின் அறிமுகம் புதுவிதமான அனுபவத்தை உருவாக்கும்.

கணவன்-மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது தோன்றி மறையும். குடும்ப நபர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நன்மையளிக்கும்.

கேது பெயர்ச்சி :

இதுவரை ராசிக்கு 2ம் இடத்தில் இருந்துவந்த கேதுபகவான் மாசி மாதம் 1ஆம் தேதி ஜென்ம ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். ஜென்ம ராசியில் உள்ள கேதுவினால் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

உங்கள்மீது இருந்த அவப்பெயர்கள் நீங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பல விஷயங்களை நன்கு அறிந்து வைத்திருப்பீர்கள்.

மனதில் நினைத்த காரியத்தில் நிதானமாக சிந்தித்து செயல்பட்டு எண்ணிய வெற்றியடைவீர்கள். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

உறவினர்களிடம் சற்று அனுசரித்து செல்வதன் மூலம் மேன்மை உண்டாகும். பயனற்ற செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். குடும்ப நபர்களை பற்றிய எண்ணம் மேலோங்கும்.

அரசியல் சார்ந்த பணியில் இருப்பவர்கள் சற்று நிதானத்துடன் செயல்படுவது நன்மையளிக்கும். பேசும்போது தகுந்த ஆதாரங்களுடன் பேசுவது உங்கள் மீதான மதிப்பை அதிகப்படுத்தும். செய்யும் செயல்களில் சிந்தித்து செயல்படவும். உடனிருக்கும் சக தொண்டர்களை புரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.

உத்தியோகஸ்தரர்களுக்கு:

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் பேசும்போது சிந்தித்து பேசவும். உத்தியோகம் தொடர்பான பொறுப்புகளும், பணிகளும் அதிகரிக்கும். எந்த செயலையும் பதற்றமின்றி நிதானத்துடன் மேற்கொள்ளவும். கருத்துக்களை பரிமாறும்போது சூழ்நிலையை அறிந்து செயல்படுவது மேன்மையளிக்கும். பணியில் எதிர்பார்த்த இடமாற்றம் சற்று காலதாமதமாக கிடைக்கும்.

விவசாயிகளுக்கு:

பயிர் விளைச்சலில் எதிர்பார்த்த லாபம் சிறிது அலைச்சலுக்கு பின்பு கிடைக்கும். பயிர்களை தேர்ந்தெடுக்கும்போது சற்று கலந்து ஆலோசித்து முடிவெடுக்கவும். கால்நடைகளின் ஆரோக்கியத்தில் சற்று விழிப்புணர்வு வேண்டும். மனைகள் தொடர்பான செயல்பாடுகளில் அமைதி வேண்டும்.

பெண்களுக்கு:

மனதில் புதுவிதமான யோசனைகளும், விருப்பங்களும் தோன்றும். பெற்றோர்களிடம் கலந்து ஆலோசித்து தகுந்த முடிவுகளை எடுக்கவும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணிபுரியும் இடத்தில் சக தோழிகளிடம் குடும்ப விவகாரங்களை பகிர்வது நன்மையளிக்கும்.

மாணவர்களுக்கு:

கல்வி கற்கும் மாணவர்கள் சற்று கவனத்துடன் இருக்கவும். நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். படிக்கும்போது ஒருமுறைக்கு இருமுறை எழுதி பார்க்கவும்.

வியாபாரிகளுக்கு:

தொழில் சார்ந்த முயற்சிகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தொழில் கூட்டாளிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும்.

சிறப்பு வழிபாடு :

சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபட மனத்தெளிவு உண்டாகும்.

loading...