சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் கும்ப ராசியினருக்கு கிடைக்கபோகும் மிகப்பெரிய பேரதிஷ்டம் என்ன தெரியுமா?

Report
165Shares

கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். இதுவரை 11ம் இடத்தில் இருந்த சனிபகவான் இனி விரய ஸ்தானத்தில் விரய சனியாக சஞ்சாரம் செய்ய உள்ளார்.

சனிபகவான் மகரம் ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு 2 வது இடம், 6வது இடம், 9 வது இடங்களைப் பார்க்கிறார். சனிபகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் அதிபதி, ராசி அதிபதியுமாவார். ஏழரையோ, அஷ்டமத்து சனியோ, கண்டச்சனியோ எதுவாக இருந்தாலும் நன்மையே செய்வார் எனவே கவலைப்படாமல் இந்த ஏழரை சனி பகவானை கடந்து விடலாம்.

கும்ப ராசிக்கு ஏழரை ஆரம்பிக்குதே என்று அஞ்ச வேண்டாம் இந்த ஏழரை ஆண்டு காலம் ஏற்றங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. கும்பம் ராசிக்காரர்களுக்கு ஜாதகப்படி கிரகங்களின் சஞ்சாரம் நல்ல நிலையில் இருந்தாலோ, தசாபுத்தி நன்றாக இருந்தாலோ எந்த பாதிப்பும் வராது.

தீர்வு கிடைக்கும் என்று எண்ணி குறுக்கு வழியில் சென்றால் பாதிப்பு அதிகமாகிவிடும். அடுத்து உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாகனத்தில் செல்லும் போது அதிக கவனம் தேவை. வீட்டில் இருக்கும் பெண்கள், குடும்பத்தில் எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் அமைதியாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு வார்த்தையை விட்டு விட்டால் உறவுகளில் விரிசல் ஏற்பட்டுவிடும்.

புதிய வேலை கிடைப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த சம்பளமும் கிடைத்துவிடும். ஆனால் அந்த வருமானத்தை வைத்து உபயோகமாக எதையும் உங்களால் செய்ய முடியாது. கையில் கிடைக்கும் சம்பளப் பணம் எந்த இடத்திற்கு சென்றது என்று நமக்கு தெரியாது. அந்த அளவிற்கு செலவு வந்து நிற்கும்.

உங்கள் வேலையின் காரணமாக வெளியூர்களுக்கு செல்லும் சூழ்நிலை ஏற்படும். வெகுநாட்களாக நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதவி உயர்வும், சம்பள உயர்வும் சிலருக்கு வரும் வாய்ப்புகள் உள்ளது. சக ஊழியர்களிடம் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நன்மை தரும். உங்களின் சக ஊழியர்களுக்காக நீங்கள் பணம் ஏதும் செலவழித்தால் அந்தப் பணம் உங்களுக்கு திரும்பவும் வராது. உஷாராக இருப்பது நல்லது.

படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு இருந்தாலும், நீங்கள் படித்ததை தேர்வில் மறந்து போக அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் படிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும். அதிகாலையில் எழுந்து படிப்பது நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். சக மாணவர்களிடம் அனாவசிய பேச்சை தவிர்ப்பது நன்மை தரும். பெற்றோர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது.

சனிப் பெயர்ச்சிக்கு முன்பாகவே உங்களது திருமணமானது முடிவாகி இருந்தால் திருமணம் நடைபெறுவதில் எந்த ஒரு தடையும் ஏற்படாது. திருமணத்திற்காக புதிய முயற்சிகள் எதையும் எடுக்க வேண்டாம். பொறுமை காப்பது நன்மை தரும். புதியதாக சுபகாரியங்களை நடத்த தீர்மானித்தால் தடைகள் பல ஏற்பட்டு பிரச்சினையில் போய் முடிந்து விடும்.

உங்களது தொழிலில் புதிய முதலீடுகள் எதையும் செய்ய வேண்டாம். நீங்கள் செய்து கொண்டிருக்கும் தொழிலை அப்படியே வழி நடத்தி செல்வது நல்லது. புதியதாக தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் அதை அறவே தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் புதிய தொழில் தொடங்குவதற்கு கடன் வாங்க வேண்டியதிருக்கும்.

இந்த சமயத்தில் வாங்கப்படும் கடனை உங்களால் கண்டிப்பாக திருப்பி தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு பலமுறை சிந்தித்து முடிவு எடுப்பது நல்லது. பண பரிமாற்றத்தில் கவனம் தேவை. யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

உங்களால் முடிந்தால் தினம்தோறும் பசுமாட்டிற்கு அகத்திக்கீரையும், வாழைப்பழம் கொடுக்கலாம். தினம்தோறும் இப்படி செய்ய முடியாதவர்கள் வாரம் ஒருமுறையாவது இதை செய்து பாருங்கள். வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று தக்ஷிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவிப்பது நன்மை தரும்.

loading...