சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் மீன ராசியினருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பணமழை தானாம்..!

Report
233Shares

உங்கள் ராசிக்கு 10-ம் இடமான தனுசு ராசியில் இருந்த சனி பகவான் 11-ம் இடமான மகர ராசிக்கு செல்கின்றார். இதுநாள்வரை பத்தாம் இடத்தில் இருந்து வந்த சனி பகவானால் உங்களுக்கு சில நஷ்டங்களும், சில தடைகளும், இன்னல்களும் ஏற்பட்டிருக்கும்.

ஆனால் இந்த சனிப்பெயர்ச்சியில் 11வது இடமான லாப ஸ்தானத்திற்கு வரப் போகின்றார் சனி பகவான். இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு லாபகரமான சனிப்பெயர்ச்சியாக இருக்கப்போகிறது. வீடு மனை வாகனம் வாங்கும் யோகம் கூட அமையும். இவைகளை எல்லாம் வாங்குவதற்கு அதிக பணம் தேவைப்படும்.

உங்களிடம் இதற்குத் தேவையான பணவசதி இல்லாவிட்டாலும் பணத்தை சம்பாதிப்பதற்கான வழிகள் பல வகையில் வந்து சேரும். ஆக மொத்தத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டமும், பணம் மழையும் பொழிய போகும் காலமாக அடுத்த இரண்டரை வருடங்கள் அமையப்போகிறது.

ஆனால், இந்த சமயத்தில் உங்களுக்கு வரும் வருமானத்தை சேமித்து வைத்துக்கொள்வது பிற்காலத்தில் நல்லது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களது குழந்தையின் நடவடிக்கையை கவனிப்பது மிகவும் முக்கியம். உங்களது குழந்தைகளால் மன கஷ்டம் வருவதற்கு சில வாய்ப்புகள் உள்ளது.

இதுநாள்வரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்கள் மனதிற்கு பிடித்த வேலையாக அது அமையும். சிலருக்கு எதிர்பாராமல் நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த சம்பளத்தை விட அதிக சம்பளத்தில் வேலை கிடைப்பதற்குகூட வாய்ப்புகள் உள்ளது.

பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சம்பள உயர்வும் கிடைக்கும். உங்கள் பேச்சுக்கு நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். உங்களது மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். நீங்களே எதிர்பார்க்காத அதிர்ஷ்டங்கள் எல்லாம் உங்களை தேடி வரப்போகிறது.

மேலும் மேலும் உங்களுக்கு வெற்றிகள் வந்து கொண்டே இருக்கும் நேரத்தில், தலைக்கனத்தை மட்டும் வளரவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

உங்களது முழு கவனத்தையும் படிப்பில் மட்டுமே செலுத்தினால் தான் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களது கவனத்தை மற்ற விஷயங்களில் திசை திருப்பி விட்டால் அது உங்களின் எதிர்காலத்தை பாதித்து விடும். சோம்பேறித்தனம் வேண்டாம். அன்றைய பாடங்களை அன்றைக்கே படித்து முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டு வாருங்கள்.

உங்களுக்கு இருந்த திருமண தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டு, நீங்கள் எதிர்பார்த்த வாழ்க்கைத்துணை உங்களுக்கு அமையும். வீட்டில் திருமணத்தைத் தொடர்ந்து சுபவிசேஷங்கள் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவியிடையே அன்யூன்யம் அதிகரிக்கும்.

உங்களது தொழிலில் சில வகையான மாற்றத்தை கொண்டு வரவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அந்த மாற்றம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை தரும் மாற்றமாக தான் அமையும். புதியதாக தொழில் தொடங்குவதாக இருந்தால் தொடங்கலாம். உங்களது தொழிலை நல்ல முறையில் விரிவு படுத்துவீர்கள்.

தொழிலை விரிவுபடுத்துவதற்கு தேவையான வங்கிக் கடன்கள் நிச்சயம் கிடைக்கும். கடனை அடைப்பதற்கான லாபமும் வந்து கொண்டேதான் இருக்கும். எந்தவிதமான பயமும் இல்லாமல் உங்கள் தொழிலை நடத்தலாம்.

வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் கோவில்களுக்கு சென்று உங்களால் முடிந்த நைய்வேதிதை படைத்து குழந்தைகளுக்கு பிரசாதமாக கொடுக்க வேண்டும்.