சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் விருச்சிக ராசியினருக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்.. என்ன தெரியுமா?

Report
162Shares

கடந்த ஏழு வருடங்களாக உங்களை கஷ்டப்படுத்தி வந்த சனிபகவான் இனி உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்க போகின்றார். இந்த வருட சனிப்பெயர்ச்சி உங்களை கஷ்டங்களிலிருந்து விடுவிக்கப் போகிறது. இது நாள்வரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் இனி நல்லபடியாக நடந்து முடியும்.

உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிறிது அக்கறையோடு இருப்பது நல்லது. பணவரவு சீராக இருக்கும். யாரை நம்பியும் கடனாக பணம் கொடுக்காதீர்கள்.

கொடுக்கும் கடன் திரும்ப வராமல் போவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

உறவினர்களின் வருகை இருக்கும். உங்களுக்கு இருந்த கெட்ட பெயர் நீங்கும். இப்படி அனைத்து நல்ல பலன்களும் உங்களை வந்து சேரப்போகிறது.

இது நாள் வரை வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தவர்களுக்கு நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும். மனதிற்குப் பிடித்த வேலை கிடைத்துவிட்டது என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.

ஆர்வத்தோடு வேலையில் ஈடுபடுவதன் மூலம் நல்ல பெயர் வாங்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நீங்கள் எதிர்பார்த்த சம்பளத்திற்கும் எந்த குறைவும் இருக்காது. உடன் வேலை செய்பவர்களிடம் அனாவசியமாக எந்த வாக்குவாதத்திலும் ஈடுபட வேண்டாம்.

கடந்த ஏழு வருடங்களாக உங்களது அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகள் இந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் தீரப் போகிறது. உங்களது வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இது நாள் வரை எதிர்பார்த்திருந்த ஊதிய உயர்வு இந்த வருடம் கிடைத்துவிடும். ஆனால் உங்கள் மேலதிகாரிகளிடம் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. உடன் வேலை செய்பவர்களை முழுமையாக நம்பாதீர்கள். சிலருக்கு வேலையில் இடமாற்றம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

உங்களது படிப்பில் அதிகமாக கவனம் செலுத்தி படிக்க வேண்டிய நேரம் இது. நீங்கள் நன்றாக பழித்தாலும் படித்ததை மறப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

முழு கவனத்தோடு அதிக அக்கறை எடுத்து படிப்பதன் மூலம் ஞாபகமறதி வருவதை தவிர்க்கலாம். தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றால் அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். பிறகு படித்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக விட்டுவிடாதீர்கள்.

திருமணத்தில் இருந்த தடை நீங்கி உங்கள் மனதிற்கு பிடித்தது போல் வாழ்க்கை துணை அமையப்போகிறது. சுபவிசேஷங்கள் தொடர்ந்து உங்கள் வீட்டில் நடைபெறும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு கூட இந்த சனி பெயர்ச்சி நன்மை அளிக்கப் போகிறது.

இத்தனை வருடங்களாக நஷ்டத்தை மட்டுமே கொடுத்த சனிபகவான் இனி லாபத்தை அள்ளிக் கொடுக்க போகிறார். நல்லநேரம் உங்கள் தொழிலுக்கு பிறக்கப்போகிறது.

நீங்கள் புதியதாக உங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்காக இருந்தால் இது நல்ல நேரம். உங்களுக்கான வாய்ப்புகள் தானாகவே வந்து சேரும். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் கடன் பெற முயற்சி செய்தால் கடன் தொகை கிடைக்கும்.

ஆனால் கடனாக வாங்கிய பணத்தை எப்படி முறையாக செலவிட வேண்டும் என்று யோசித்து செலவு செய்யுங்கள். அனாவசிய செலவை தவிர்ப்பது நல்லது.

வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் கோவிலுக்கு சென்று நைவேத்தியமாக இனிப்பு பிரசாதம் படைத்து, அந்த பிரசாதத்தை குழந்தைகளுக்கு தருவது நல்ல பலனைக் கொடுக்கும். உங்களால் முடிந்தால் ஒரு ஏழை பெண் குழந்தையின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்ளலாம்.