பிறக்கும் 2020 ஆண்டின் முதல் எந்த மாதம்.. எந்த ராசியினருக்கு ஆபத்தாக இருக்கபோகிறது தெரியுமா?

Report
257Shares

2019 முடிய இன்னும் ஒரு சில நாட்களே உள்ல நிலையில், 2020 நோக்கி அனைவரும் நல்ல வருடமாக அமைய வேண்டும் என காத்திருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் சரியாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே அந்த ஆண்டை கொண்டாடி வரவேற்கிறோம்.

2020க்கான பலன்கள் கணிக்கப்பட்டுவிட்டது, ஒவ்வொரு ராசிக்கும் அடுத்த வருடம் சில ஆச்சரியங்களையும், அதிர்ச்சிகளையும் வைத்து காத்திருக்கிறது.

அடுத்த வருடம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எந்த மாத்தில் எனென்ன பிரச்சினைகள் உருவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்...

மேஷம்

கோடைகாலத்தின் உச்சமாக இருக்கும் இந்த காலம், சந்தேகத்திற்கு இடமின்றி மேஷ ராசிக்காரர்களுக்கு இது சவாலான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் புதனின் பின்னடைவு ஏற்படுவதால் பதட்டங்கள் அதிகரிக்கும், மேலும் மோதல்களும், சிக்கல்களும் உங்களின் வழியில் தேடிவரும்.

ரிஷபம்

ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சோதனைகள் நிறைந்த காலமாக இருக்கும். இந்த காலங்களில் இவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட நேரிடும். இந்த காலக்கட்டத்தில் உறவுகளை சமாளிப்பதில் இவர்களுக்கு பல சிக்கல்கள் ஏற்படும், மேலும் உறவுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவும். டிசம்பர் மாதத்தில் என்ன நடந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருங்கள்.

மிதுனம்

வெளிப்படையாக சொல்வதென்றால் காதல் மாதமான பிப்ரவரி மாதம் கடினமான மாதமாக இருக்கப்போகிறது. இந்த மாதத்தில் பல கிரகங்களின் குறுக்கீட்டால் நீங்கள் தவறான முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது. நீங்கள் ஏமாற்றப்படுவதற்கும், பிறரால் திசைதிருப்பப்படுவதற்கும் நிறைய வாய்ப்புள்ளது. எனவே யாரையும் எளிதில் நம்பிவிடாதீர்கள்.

கடகம்

கடக்க ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதத்தில் காதலில் பல பிரச்சினைகள் காத்திருக்கிறது. ரிஷப ராசியில் இருக்கும் செவ்வாயாலும், மீன ராசியில் இருக்கும் புதனாலும் உங்கள் காதல் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது மேலும் பிரச்சினைகளை அதிகரிக்கும். அடுத்த சில மாதங்களில் இந்த நிலை மாறிவிடும் எனவே அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துவிடாதீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்கு புதனால் ஜூலை மாதத்தில் பல பிரச்சினைகள் ஏற்படலாம், இந்த காலக்கட்டத்தில் உங்களின் மனஅழுத்தம் உங்களை அதிகம் அச்சுறுத்தும். உங்களின் பிறந்த மாதமே உங்களுக்கு சோதனைகள் நிறைந்த காலமாக இருக்கப்போகிறது. இந்த மாதத்தில் ஏற்படும் பிரச்சினைகள் உங்களுக்கு ஆண்டின் இறுதிவரை தாக்கத்தை ஏற்படுத்தும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் சோதனைகள் நிறைந்த மாதமாக இருக்கும், இந்த மாதத்தில் அனைத்தும் தாமதமாகவும், சிரமமாகவும் நடக்கும். உங்களின் அதிகரித்த பதட்டம் வாழ்க்கையின் பிற பகுதிகளில் விபத்துக்களுக்கு வழிவகுக்கும் என்பதால் நீங்கள் மற்றவர்களை விட அதிகமாக போராடலாம், குறிப்பாக உறவுகளில் விரக்தி ஏற்படத் தொடங்கும். உங்களின் பொறுமையை மட்டும் இழந்துவிடாதீர்கள்.

துலாம்

இந்த ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரி மாதம் உங்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். உங்களின் வாழ்க்கையில் இந்த காலக்கட்டத்தில் சமநிலையின்மை இருக்கும், மேலும் உங்களை சுற்றி இருக்கும் குழப்பங்களில் இருந்து உங்களால் வெளியே வர முடியாது. உங்கள் மனதிற்குள் ஏற்படும் போராட்டங்களை உங்களால் சமாளிக்க முடியாது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் மோசமான மாதமாகவும், சோதனைகள் நிறைந்த மாதமாகவும் இருக்கப்போகிறது. சரியான புரிதல் மற்றும் தொடர்பு இல்லாததால் ஏற்படும் பிரச்சினைகள் இவர்களின் மனநிலையை இந்த காலக்கட்டத்தில் வெகுவாக பாதிக்கும். உங்களின் அவசரமாக செயல்பாடுகள் கண்ணீருக்கு வழிவகுக்கும்.

தனுசு

ஏப்ரல் மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு ஆபத்தான மாதமாக இருக்கப்போகிறது. இந்த ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும் ஆனால் வரும் காலங்களில் அந்த நிலை மாற வாய்ப்புள்ளது. குறிப்பாக நிதி மற்றும் உறவுகள் தொடர்பாக பல பிரச்சினைகள் ஏற்பட்லாம். உங்கள் வாழ்க்கையின் பதட்டம் உங்களின் முடிவுகளில் குழப்பங்களை ஏற்படுத்தும்.

மகரம்

ஜீன் மாதம் உங்களுக்கு மோசமான மாதமாக இருக்கப்போகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த மாதத்தில் உங்களின் கருத்துக்கள் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட வாய்ப்புள்ளது. புதனின் தாக்கத்தால் மற்றவர்களிடம் உங்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் மீது திணிக்காதீர்கள், உங்கள் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தவும் செய்யாதீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் காதலில் பல பிரச்சினைகளும், சோதனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் கடந்த கால காதல் பிரச்சினைகள் இந்த மாதத்தில் மீண்டும் உயிர்பெறும், இதுவே உங்களின் நிகழ்கால பிரச்சினைகளுக்கு காரணமாக அமையலாம். உங்களின் தவறான அணுகுமுறையால் உங்கள் உறவு நிரந்தரமாக பிரிய வாய்ப்புள்ளது. உங்களின் தொடர்புகொள்ளும் முறையில் நிதானத்தை கடைபிடியுங்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் ஆபத்து நிறைந்த மாதமாக இருக்கப்போகிறது. ஆண்டின் ஆரம்பகாலத்தில் இருந்தே சோதனைகள் நிறைந்த காலமாக தொடங்கி அது இந்த மாதத்தில் உச்சத்தை பெறும். உங்களின் எதிர்காலத்தை சிதைக்கும் பல செயல்களில் நீங்கள் இந்த மாதத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. தேவையில்லாத செலவுகளை இந்த மாதத்தில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஆண்டின் இறுதி உங்களுக்கு வளமான காலமாக மாறும்.