இந்த இடத்தில் மீன் மச்சம் இருக்கா? நீங்கள் தான் உலகிலேயே ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டசாலியாம்! ஏன் தெரியுமா?

Report
80Shares

மச்சம் உடம்பில் இருந்தால் ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டம் என்று கூறுவார்கள்.

மனித உடலில் உள்ள செல்கள் வேகமாகப் பிரியும் போது தோலில் ஏற்படும் கருப்பு நிறப் புள்ளியே மச்சம் ஆகும்.

இத்தகைய மச்சம் சிலருக்கு நடுத்தர வயதில் மறைந்துவிடும். சிலருக்கு அவை தொடர்ந்து பரவும்.

மச்சம் குறித்த ஆய்வை லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் ஆராய்ச்சிக் குழு மேற்கொண்டது. அது மச்சம் இல்லாதவர்களை விட மச்சம் இருப்பவர்களுக்கு வலுவான எலும்புகள் இருக்கிறது என்றும் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய் எலும்புகளைத் தாக்கும் அபாயம் மிகவும் குறைவு என்றும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் மச்சக்காரர்களுக்கு இறுக்கமான தசைகளும், ஆரோக்கியமான கண்களும், இதயமும் இருக்கும், மேலும் தோல் சுறுக்கம் குறைவாகத் தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே மச்சம் அதிகமாக இருந்தால் அவர்கள் அதிர்ஷ்ட சாலிதான்.

இதேவேளை, ஜோதிடத்தின் படி ஒவ்வொரு மச்சமும் ஒரு அறிகுறியை குறிப்பதாக நம்ப படுகிறது. அந்த வகையில் சில மச்ச ரகசியங்கள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

மீன் சின்னம்

இது உங்கள் உடலில் இருந்தால் உங்கள் வாழ்க்கை கௌரவம் மிக்கதாக இருக்கும். மீன் என்பது விஷ்ணுவின் மறுபிறவி என்று கூறப்படுகிறது.

வில் மற்றும் அம்பு

உங்கள் உடலில் வில் மற்றும் அம்பு போன்ற அடையாளங்கள் இருத்தல் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்திப்பீர்கள். ஆனால் இறுதியில் வெற்றி உங்களுடையதாய் இருக்கும். எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் நீங்கள் நினைத்ததை அடைந்தே தீருவீர்கள்.

முக்கோணம்

உங்கள் உடலில் முக்கோண சின்னம் இருந்தால் உங்கள் வாழ்க்கை சுவாரசியங்கள் நிறைந்தகாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் பல வித்தியாசமான அனுபவங்களை பெறுவீர்கள். செல்வத்திற்கு எந்த குறையும் இல்லாமல் வாழ்வீர்கள். மேலும் இந்த சின்னம் இருப்பவர்கள் அனைவரையும் வசீகரிப்பவராகவும், அனைவருக்கும் பிடித்தவராகவும் இருப்பார்கள்.

கை புஜம்

கை புஜத்தில் மச்சம் இருப்பவர்கள் அமைதியானவர்களாகவும், கண்ணியமானவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமனதாக இருக்கும்.

கன்னம்

இடது அல்லது வலது கன்னங்களில் மச்சம் இருப்பவர்கள் ஆழமான சிந்தனையாளர்களாக இருப்பார்கள். இவர்கள் உலகத்துடன் தன்னை தொடர்புபடுத்திக்கொள்வதில் ஆர்வமற்றவர்களாக இருப்பார்கள்.

காது

காதில் மச்சம் இருப்பது மிகவும் அபூர்வம் மற்றும் அதிர்ஷ்டமாகும். காதில் மச்சம் இருப்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் ஆசைப்படும் அனைத்தும் எந்த சிரமமும் இன்றி எளிதில் கிடைத்துவிடும்.

கண்கள்

கண்களில் மச்சம் இருப்பவர்கள் மிகவும் நேர்மையானவராக இருப்பார்கள். மற்றவர்களிடம் எதையும் மறைக்காத இவர்கள் நம்புவதற்கு பூரண தகுதி உடையவர்கள் ஆவர்.

loading...