ஆனி மாத ராசிப்பலன்கள் துலாம் முதல் மீனம் வரை.. குபேரனின் ஆசி பெற்று பண மழையில் நனையப்போகிறவர்கள் யார்?..

Report
594Shares
துலாம்

திடீரென்று உணர்ச்சி வசப்பட்டு கவலைப்படும் துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் சில குழப்பங்கள் நேர்ந்தாலும் இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும்.

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் உண்டாகும். வரவு இருந்த போதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் செலவு உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும். வரவேண்டிய பணவரவுகள் இருப்பின் அது வந்து சேரும்.

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான காலகட்டம். எதிர்பார்க்கும் இடங்களில் இருந்து வாய்ப்புகள் வரலாம். உடனிருப்பவர்களால் நல்ல ஆதாயம் ஏற்படும்.

அரசியல் வாதிகள் தக்க சமயத்தில் காரியங்களை சாதித்துக் கொள்ள முடியும். பிரச்சினைகளில் இருந்து சற்று தள்ளியே நில்லுங்கள். இப்போதைக்கு எதிலும் தலையிட வேண்டாம்.

பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து குறையலாம். உடல் நலத்தில் சிறிது அக்கறை செலுத்தவும்.

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். திறமை வெளிப்படும்.

சித்திரை 3, 4 பாதம்:

இந்த மாதம் கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பிவந்து சேரும் நாள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.

சுவாதி:

இந்த மாதம் சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். சனி சஞ்சாரத்தால் ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம்.

விசாகம் 1, 2, 3ம் பாதம்:

இந்த மாதம் எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும்.

பரிகாரம்: பெருமாள் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வாரை 11 முறை வலம் வரவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 30, ஜூலை 1

அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 23, 24.

விருச்சிகம்

அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது என்ற எண்ணம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாக்கு நாணயம் உண்டாகும். முக்கிய நபர்கள் நட்பு கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும்.

குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத் தில் மன நிறைவு காண்பீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் கையாளும் பொருள்களை பாதுகாப்பாக வைப்பது நல்லது. எதையும் தக்க சமயம் பார்த்து பேசுவது உகந்தது.

கலைத்துறையினர் பிறர் விசயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மூத்த கலைஞர்கள் உங்களுக்கு அறிவுரை வழங்கினால் அதை ஏற்றுக்கொள்வது மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும்.

அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். தொண்டர்களுடான கருத்து வேறுபாடு மறையும். சின்ன சின்ன விசயங்களுக்காக மாற்று கருத்துகள் தோன்றி மறையும். எதிர்கள் கட்டுக்குள் இருப்பார்கள்.

பெண்களுக்கு மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.

விசாகம் 4ம் பாதம்:

இந்த மாதம் சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல் இருந்தாலும், ஏதோவொரு வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும்.

அனுஷம்:

இந்த மாதம் பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பு ஏற்பட்டாலும் எந்த வித பாதிப்பும் உண்டாகாது.

கேட்டை:

இந்த மாதம் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். சிலருக்கு திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடப்பதில் தாமதம் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.

பரிகாரம்: சுப்பிரமணிய சுவாமிக்கு நெய் விளக்கேற்றி வழிபடுங்கள். நன்மைகள் நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 2, 3

அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 25, 26, 27.

தனுசு

உங்களுக்கென்று ஒரு வட்டம் போட்டு அதில் வாழ ஆசைப்படும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் பல வழியிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும்.

குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் செலவும் ஏற்படும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையான உழைப்பிற்கு பின் நல்ல பலன் பெறுவார்கள், போட்டிகள் விலகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து வரும் தகவல்களால் மனதிற்கு நிம்மதி இருக்காது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். சக ஊழியர்களால் உதவியும் இருக்கும். மேலிடத்திலிருந்து வரும் தகவல்கள் உங்கள் எதிர்காலத்திற்கு தேவையானதாக இருக்கும்.

கலைத்துறையினர் முக்கியமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாராட்டு பெறுவீர்கள். வெளிநாடு பயணங்கள் வெற்றிகரமாக இருக்கும். தீவிர முயற்சிகளால் வெற்றி காண்பீர்கள்.

அரசியல் துறையினர் வெற்றியை படிபடியாக எட்டுவீர்கள். அனைவரின் பாராட்டும் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். எதிரிகளால் மறைமுக தொல்லைகள் உண்டாகும். வீண் அலைச்சல்களால் மனம் வருத்தப்படும்.

பெண்களுக்கு அறிவுபூர்வமாக செயல் பட்டு சில முக்கிய முடிவு எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த காரியம் நிறைவேறும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.

மூலம்:

இந்த மாதம் பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம்.

பூராடம்:

இந்த மாதம் நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. தகுந்த வரன் கிடைத்து திருமணம ஏற்பாடு இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.

உத்திராடம் 1ம் பாதம்:

இந்த மாதம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனாலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும்.

பரிகாரம்: நமசிவாய மந்திரத்தை உச்சரித்து கொண்டே இருங்கள். தீவினை நெருங்காது.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 4, 5

அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 28, 29.

மகரம்

கோபப் படுபவர்களிடம் இருந்து சற்று தள்ளியே நிற்கும் மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் காரியம் துரிதமாக நடைபெறும். சில எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியவில்லை என்ற எண்ணம் மனதை வருத்திக் கொண்டிருக்கும். பணத்தட்டுப்பாடு ஏற்படுவதால் மிகவும் டென்ஷனாகி விடுவீர்கள். மனவலிமையை அதிகமாக்க தியானம் செய்யுங்கள். தீராத தலைவல்லியாக இருந்த காரியங்கள் இப்பொழுது சாதகமாகும்.

குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்து வது நல்லது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதே நேரத் தில் சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மேல் அதிகாரிகள் திருப்தியடைவார்கள். சக ஊழியர்களின் பொறாமை உங்கள் மேல் விழும்.

கலைத்துறையினர் அனுபவம் வாய்ந்த கலைஞர்களை சந்திக்க நேரிடும். எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களை வந்து சேர தாமதமாகும். வெளிநாடு சென்று வர வாய்ப்பு கிடைக்கும் பொழுது உங்களுடைய பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

அரசியல் துறையினர்கள் மெத்தனமான போக்கை கைவிட்டு உற்சாகத்துடன் செயல்பட அறிவுறுத்தப் படுகிறார்கள். நிரந்தரமான செயல்கள் வெற்றிக்கு வழிவகுக்கும். மக்களுக்கு வாக்குறுதி அளிக்கும் போது கவனம் தேவை.

பெண்களுக்கு அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.

மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:

இந்த மாதம் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

திருவோணம்:

இந்த மாதம் கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

அவிட்டம் 1,2 பாதம்:

இந்த மாதம் உங்கள் நிலைமை மாறும். நீங்கள் விரும்பியதை கேட்டு பெற்றுக் கொள்ளலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கன்சல்டன்சி துறைகளில் வேலை செய்பவர்கள் தகுந்த முன்னேற்றம் கிடைக்கும். பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர்களும் நற்பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வழிபடுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 6, 7

அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 30, ஜூலை 1.

கும்பம்

ஆக்க பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காணும் கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் தெளிவான மனநிலை இருக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை .

குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்குவர தாமதம் ஆகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உங்களுக்கு கீழ் உள்ளவர்கள் மீது கரிசனத்துடன் நடந்து கொள்வீர்கள்.

கலைத்துறையினர் நடந்து முடிந்த ஒரு செயலுக்காக வருத்தமாக இருக்க வேண்டிய சூழ்நிலை நிலவும். இசைக் கலைஞர்கள் நல்ல மதிப்பும், மரியாதையும் கிடைக்கப் பெறுவீர்கள்.

அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த செயல்கள் நல்ல முறையில் நடந்து முடிவதற்கான சூழ்நிலைகள் அமையப் பெறுவீர்கள். தங்கு தடையின்றி எதிர்பார்த்த காரியங்கள் நடைபெறுவதால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும்.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். விளையாட்டு மற்றும் போட்டிகள் சாதகமாக பலன் தரும். சகமாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்.

அவிட்டம் 3, 4 பாதம்:

இந்த மாதம் அலைச்சல் இருக்கும். சிலர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் குழந்தைகளால் சிற்சில பிரச்சனைகள் வரலாம். அதற்காக உங்களின் குழந்தைகள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வரும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளுங்கள்.

சதயம்:

இந்த மாதம் தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதம்:

இந்த மாதம் மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும்.

பரிகாரம்: நவகிரகங்களை தினமும் வலம் வந்து வணங்கவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, சனி

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 8, 9, 10

அதிர்ஷ்ட தினங்கள்: ஜுலை 2, 3.

மீனம்

உங்களுடன் பழகுபவர்களும் உற்சாகமாக இருக்க வேண்டும் என்று விரும்பும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் சில சங்கடங்கள் நேரலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உஷ்ணம் சம்பந்தமான நோய் ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும் அதனால் திடீர் பண நெருக்கடி வரலாம். இடம் பொருள் அறியாமல் பேசுவதால் அடுத்தவர்களிடம் மனஸ்தாபம் உண்டாகலாம்.

குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்வது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. பணவிஷயத்தில் கூடுமானவரை அடுத்தவரை நம்புவதை தவிர்ப்பது நல்லது. கெட்ட கனவுகள் உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல் பட்டு வெற்றி காண்பார்கள். ஆனால் மனதில் ஏதாவது குறை ஏற்படும். நீண்ட நாளைய முயற்சிகள் வெற்றி பெற கடின உழைப்பு தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம்.

கலைத் துறையினருக்கு அதிகமாக உழைக்க வேண்டி வரலாம். எதிர்பார்த்த காரியங்கள் சற்று தள்ளிப் போவதால் சிறிய வருத்தம் ஏற்படலாம். இந்த மாத இறுதியில் புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.

அரசியல்வாதிகளுக்கு உண்டான வேளைப்பளுவால் உடல் அசதி ஏற்படும். மிகவும் சோர்வு ஏற்பட்டு வேலையை தள்ளிப் போடுவீர்கள். நெருக்கடியான சமயங்களில் யோசித்து செயல்படுவது நல்லது.

பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சகமாணவர், நண்பர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி 4ம் பாதம்:

இந்த மாதம் தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.

உத்திரட்டாதி:

இந்த மாதம் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும்.

ரேவதி:

இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.

பரிகாரம்: தினமும் மகாலட்சுமி அஷ்டகம் படியுங்கள். வெற்றி கிட்டும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 11, 12

அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 4, 5.

25757 total views