ஆனி மாத ராசிப்பலன்கள் மேஷம் முதல் கன்னி ராசி பலன் இதோ.. யாருக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்..!

Report
491Shares
மேஷம்

சிக்கலான காரியங்களையும் தெளிவான முடிவெடுத்து பிரச்சினைகளை தீர்க்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் வீண் மனக்கவலை உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது. உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.

தொழில் வியபாரத்தில் இருந்த போட்டி கள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவ தில் சிந்தனை செலுத்துவீர்கள். சிறு வியாபாரிகள் கூட அதிக லாபத்தை காண முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேல் அதிகாரிகளிடமும் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும்.

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தாராளமாக கிட்டும். யாரையும் நம்பி எந்த ரகசியங்களையும் கூற வேண்டாம். சிலர் எதிரிகளின் தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும்.

அரசியல் பிரமுகர்களுக்கு எதிர் பார்த்த விசயங்கள் கை கூடி வரும். அரசு விவகாரங்களில் தலையிடும் போது ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நன்மையைத்தரும்.

பெண்களது செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள். திறமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். செலவுகளை குறைப்பது நன்மை தரும்..

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் நம்பிக்கை உண்டாகும்.

அஸ்வினி:

இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனதுணிவு உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

பரணி:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுவது வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்:

இந்த மாதம் கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

பரிகாரம்:

தினமும் கந்தகுரு கவசத்தை பாராயணம் செய்யுங்கள். எதிலும் சிரமம் ஏற்படாது.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்

சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 16, 17, ஜூலை 13, 14

அதிர்ஷ்ட தினங்கள்: ஜுலை 6, 7.

ரிஷபம்

எப்போதும் நியாயத்தின் பக்கம் இருக்க விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் தெளிவான சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்.

குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள். கணவன், மனைவிக் கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். வியாபாரிகள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் கால கட்டம். எதிர்மறையான சிந்தனைகளை விட்டு விடுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள் கூறிய வேலையை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். சகஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. நேரத்திற்கு தகுந்தாற்போல் பேச்சை மாற்றி வெற்றி பெறுவீர்கள்.

கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்பை தவற விட்டு பின்பு நம்பிக்கையான ஒருவர் மூலம் அதைப் பெற முடியும். எந்த விசயத்திலும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது எதிர்காலத்திற்கு உதவும்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பணிகள் நடப்பதற்கு சற்று அதிகமாக உழைக்க வேண்டி வரலாம். தந்தை வழி அரசியல் செய்பவர்கள் எதிலும் கவனமாக பேசுவது நல்லது.

பெண்களுக்கு அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

கார்த்திகை 2, 3, 4 பாதம்:

இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். வீண் வாக்குவாதஙக்ளை தவிர்ப்பது நல்லது.

ரோகிணி:

இந்த மாதம் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள்.

மிருக சிரீஷம் 1, 2, பாதம்:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறலாம். மேல் அதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும்.

பரிகாரம்:

சிவன் கோவிலுள்ள நந்தீஸ்வரருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 18, 19,

அதிர்ஷ்ட தினங்கள்: ஜுலை 8, 9, 10.

மிதுனம்

நீங்கள் உழைப்பதின் மூலம் முன்னுக்கு வர வேண்டும் என விரும்பும் மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் வாழ்க்கைக்கு தேவையான புதிய வசதிகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய ஆடை அணிகலன்கள் - ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள்.

வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். ஆனால் மனகுழப்பம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எடுக்கும் காரியம் சிறிது முயற்சிக்குப் பின் நடைபெறும்.

குடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை உண்டாகும். அவர்களால் சந்தோஷம் கிடைக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திறம்பட செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி சாதகமான பலன் தரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகனங்கள் சேர்க்கை இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. புதிய தொழில் தொடங்குவது பற்றி நண்பர்களிடம் ஆலோசனை நடத்துவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங் களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினர் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் பெற முடியும். புதிய வாய்ப்புகளால் மனம் மகிழ்ச்சி அடையும்.

அரசியல் துறையினருக்கு ஏற்படும் அனுபவங்கள் எதிர்காலத்திற்கு தேவைப்படும் அறிவுரைகளாக இருக்கும். எந்த ஒரு செயலில் ஈடுபடும் போதும் கவனமாக இருப்பது மிகவும் நல்லது.

பெண்களுக்கு உங்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். ஆன்மீக நாட்டம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்தநிலை மாறும். சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவி கிடைக்கும்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:

இந்த மாதம் வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும். செலவுகள் ஏற்படும். பயண சுகம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பது தாமதப்படும்.

திருவாதிரை:

இந்த மாதம் தேவையான பணஉதவி கிடைக்கலாம். மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை.

புனர்பூசம் 1, 2, 3 பாதம்:

இந்த மாதம் எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர் பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத பணவரத்தும் இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும்.

பரிகாரம்: நரசிம்மர் கோவிலுக்குச் சென்று நெய் விளக்கேற்றி வழிபடுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 20, 21, 22

அதிர்ஷ்ட தினங்கள்: ஜுலை 11, 12.

கடகம்

மனிதநேயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் எண்ணிய எண்ணம் ஈடேறும். யாராவது உங்கள் வேலைகளைக் குறை கூறிக் கொண்டிருப்பார்கள். வீரியத்தைக் குறைத்துக் கொண்டு காரியத்தை பெரிதாக எண்ணுங்கள். அனைவரையும் அரவணைத்துச் சென்று காரியங்களை நடத்துவீர்கள்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழிலில் இருந்த பண பிரச்சனை தீரும். பங்குதாரர்கள் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருப்பார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.

கலைத்துறையினர் முன் பின் பழக்கமில்லாதவர்களிடம் எந்த ரகசியங்களையும் கூற வேண்டாம். புதிய அனுபவங்கள் கிடைக்கலாம்.

அரசியல் துறையினர் முக்கியமான நபர்களின் அறிமுகங்களை சந்திப்பதை சற்று தள்ளிப் போடுவது நல்லது. எடுத்த காரியங்களில் சற்று நிதானமாக செயல் படுவது நல்லது.

பெண்களுக்கு உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். திடீர் செலவு உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

புனர் பூசம் 4ம் பாதம்:

இந்த மாதம் தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். போட்டிகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும்.

பூசம்:

இந்த மாதம் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கவனம் தேவை.

ஆயில்யம்:

இந்த மாதம் நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பண வரத்து தாமதப்படும். கோபத்தை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: மாங்காடு காமாட்சி அம்மனை மனதார துதித்து வழிபடுங்கள். தடைகள் அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்

சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 23, 24

அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 15, 16, 17 ஜூலை13, 14.

சிம்மம்

திட்டமிட்டு செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தும் சாதகமாகும் என்று நம்பும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் நினைத்த காரியங்கள் நடக்கும். நடக்கும் முறை வேறுபட்டாலும் முடிவு உங்களுக்குச் சாதகமாக இருக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். கவனம் தேவை.

குடும்பத்தைப் பொறுத்தவரை கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். தூரத்திலிருந்து வரும் உறவினர்கள் குடும்பப் பொறுப்பை உங்களுக்கு உணர்த்துவார்கள்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கடன் பிரச்சனைகள் தீரும். போட்டிகள் குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் நல்லபடியாக முடியும். பங்குதாரர்களிடம் வாக்கு வாதத்தைதவிர்ப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்யும் படியிருக்கும். தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறலாம். தேவைக்கேற்பற்ற வசதிகள் கிடைக்கும்.

கலைத்துறையினர் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். சிலர் சொன்ன சொல்லை காப்பாற்ற சிரமப் பட வேண்டியிருக்கும். புதிதாக பழகுபவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நன்மையைத் தரும்.

அரசியல் துறையினர் அதிக கவனமுடன் செயலாற்ற வேண்டிய கால கட்டம். உங்களுக்கு பக்கபலமாக சிலர் இருப்பினும் அனைவரையும் நம்பி எந்த காரியத்திலும் ஈடுபட வேண்டாம். மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள்.

பெண்களுக்கு எடுத்த முடிவை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும்.

மாணவர்களுக்கு கல்வியில் காணப்பட்ட மெத்தன போக்கு நீங்கி சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள். பிடிவாதத்தை விடுவது நன்மை தரும்.

மகம்:

இந்த மாதம் சக ஊழியர்களிடம் சகஜமாக பேசி பழகுவது நல்லது. பணவரத்து அதிகமாகும். எதிர்ப்புகள் நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும். மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.

பூரம்:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமான பலன்தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேல் அதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர் பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும்.

உத்திரம் 1ம் பாதம்:

இந்த மாதம் குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும். எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதை தடுக்கலாம். பிள்ளைகள் மனம் மகிழும்படி நடந்து கொள்வார்கள். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: தினமும் சிவன் ஆலயத்திற்குச் சென்று விளக்கேற்றி வழிபட இன்னல்கள் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்

சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 25, 26, 27

அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 18, 19.

கன்னி

வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். வேளை தவறி சாப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.

குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும் படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். எதிரில் இருப்பவரை சரியாக எடைபோடும் திறமை உங்களுக்கு ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமை யாக உழைக்க வேண்டி இருக்கும். அதனால் களைப்பு ஏற்படலாம். மேலிடத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும்.

பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் தடைநீங்கி சாதகமாக நடக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது.

உத்திரம் 2, 3, 4 பாதம்:

இந்த மாதம் உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம்.

அஸ்தம்:

இந்த மாதம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம். சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.

சித்திரை 1, 2, பாதம்:

இந்த மாதம் கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம். ஜாதக தசாபுக்தியை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்வதால், மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை இருக்காது.

பரிகாரம்: ஏழை பிராமணருக்கு அன்னமிட்டு உதவுங்கள். தொல்லைகள் அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 28,29

அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 20, 21, 22.

17730 total views