கர்ணனை போல சூரிய பகவானின் முழு அருளும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா? இன்றைய ராசிப்பலன்..!

Report
1008Shares
மேஷம்

மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய தொழில் முயற்சிகளால் சுப விரயங்கள் உண்டாகும். பிறருக்கு உதவும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பணப்புழக்கத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்த சகோதரர்களிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

ரிஷபம்

உங்களுடைய எல்லா காரியங்களுக்கும் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். பிறருக்கு எடுத்துரைக்கும் உங்களுடைய ஆற்றலால் நல்ல பயன்கள் உண்டாகும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்து காத்திருந்த விஷயங்களில் அனுகூலங்கள் ஏற்படும். தொழிலில் பங்குதாரர்களின் முழு ஒத்துழைப்பும் உங்களுக்குக் கிடைக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஸ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மிதுனம்

வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அதற்காக எதிர்பார்த்த இடங்களில் இருந்து பண உதவிகள் கிடைக்கும். இழந்த பொருள்களை மீட்க முயற்சி செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணியில் உள்ளவர்குள் சக ஊழியர்களிடம் அனுசரணையோடு நடந்து கொள்ள வேண்டும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிரஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

கடகம்

வீட்டில் பிள்ளைகளின் மூலமாக சுப செய்திகள் உங்களைத் தேடி வரும். நிர்வாகத்தில் உங்களுடைய தனித்திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடைய ஆதரவினால் பொருளாதார மேன்மை உண்டாகும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

சிம்மம்

நண்பர்களின் மூலமாக புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். கால்நடைகளின் மூலமாக சில சில விரயச் செலவுகள் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளும் வாய்ப்பகள் உண்டாகும். தாயின் உடல் நலத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வாகனப் பயணங்களால் லாபம் பெருகும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கன்னி

எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு லாபம் அடைவீர்கள். புதிய ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட தேடல்கள் உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். உடன் பிறந்த சகோதரர்களுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

துலாம்

புதிய தொழில் முதலீடுகளில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு ஏற்படும். அரசாங்கப் பணிகளில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் அமையும். இறை வழிபாட்டினில் மனம் ஈடுபடும். உறவுகளிடம் அமைதிப் போக்கிளைக் கையாளுங்கள். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்படும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

செய்கின்ற தொழிலில் புதிய புதிய வாய்ப்புகள் உண்டாகும். மகான்களுடைய தரிசனங்கள் மற்றும் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். தந்தையின் சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு

இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட பணியில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவார்கள். எண்ணிய காரியங்களை முடிப்பதில் கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பிறருடைய பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டியிருக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞசு நிறமும் இருக்கும்.

மகரம்

உறவினர்களுக்கு இடையே உறவு நிலை மேம்பட்டு நிற்கும். பொன், பொருள் சேர்ப்பதற்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் கொஞ்சம் கவனத்துடன் செயல்பட வேண்டும். நிர்வாகப் பொறுப்புகளில் உள்ளவர்குள் அதில் சிறுசிறு மாற்றங்களைச் செய்வதன் மூலமாக உங்களுக்கு சாதகமான சூழலை அமைத்துக் கொள்ள முடியும். போட்டிகளில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி உங்களுக்குக் கிடைக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கும்பம்

விவாதங்களின் மூலமாக உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும். ஆன்மீக வழியில் உங்கள் மனம் ஈடுபடும். புதிய நபர்களால் தொழில் வாய்பபுகள் அதிகரிக்கும். பெரிய பெரிய மகான்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் சுப விரயங்கள் உண்டாகும். பணிகளில் கொஞ்சம் கவனம் தேவை.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மீனம்

தொழிலில் பங்குதாரர்களுடைய உதவியினால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

30365 total views