துலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?.. தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க..!

Report
1231Shares

துலாம் ராசி ஜோதிடத்தின் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் துலாம் ராசியில் பிறப்பது என்பது மிகவும் அதிர்ஷ்டமான ஒன்றாகும். இந்த ராசியில் பிறந்தவர்கள் இரக்கம், பொறுமை, காதல் உணர்வு,அமைதி, சமநிலை என அனைத்து நல்ல குணங்களையும் பெற்றவர்களாக இருப்பார்கள். துலாம் ராசிக்குண்டான கடவுள் சுக்கிரன் ஆவார், பஞ்சபூதங்களில் இது காற்றை பிரதிபலிக்கும்.

அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பும் இவர்கள் வாயிலிருந்து இல்லை என்ற வார்த்தை வராது, இதன் முடிவு அவர்களை அவர்களே சிரமப்படுத்தி கொள்வார்கள். பல நல்ல குணங்கள் இருந்தாலும் இவர்களிடமும் சில தீய குணங்கள் இருக்கத்தான் செய்யும். இந்த பதிவில் துலாம் ராசியில் பிறந்தவர்களின் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

சாதுர்யம்

எந்தவொரு செயலையும் சரியாக செய்து முடிப்பதில் இவர்கள் வல்லவர்களாக இருப்பார்கள், ஆனால் இவர்களால் தந்திரமாக நடந்து கொள்ள முடியாது. மற்றவர்களின் உணர்ச்சிகளை தூண்டுவதில் இவர்கள் மிகவும் சிறந்தவர்கள்.

காதல்

இவர்களின் ராசிக்கடவுள் சுக்கிரன் ஆவார், அதனால் இவர்கள் காதலில் மற்ற அனைவரையும் விட சிறந்தவராக இருப்பார்கள். இவர்கள் வாழ்க்கையில் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் அடிப்படையானவிஷயம் அன்பாகத்தான் இருக்கும். ஒருவேளை உங்களுக்கு துலாம் ராசிக்காரர்கள் காதலன்/காதலியாக கிடைத்தால் அது நீங்கள் செய்த அதிர்ஷ்டமாகும்.

வசீகரம்

இவர்கள் மற்றவர்களிடம் பேசும் விதமே இவர்களை நோக்கி அனைவரையும் ஈர்க்கும். அனைவரையும் மதித்து அவர்கள் ரசிக்கும் படி பேசுவதுடன் சுவாரஸ்யாயன தலைப்பாக பார்த்து பேசுவார்கள். இவர்களுடன் இருக்க அனைவருமே ஆசைப்படுவார்கள்.

நேர்மை

துலாம் ராசியின் சின்னமே நேர்மையின் அடையாளமான தராசுதான். அதற்கேற்ப இவர்களும் நீதி மற்றும் நேர்மை மீது அதிக நம்பிக்கை கொண்டவர்கள். தனக்கு தேவையானவற்றை நேர்மையான முறையில் அடைவார்களே தவிர ஒருபோதும் குறுக்கு வழியை நாடமாட்டார்கள்.

சமநிலை

இவர்கள் எப்பொழுதும் தங்கள் நிதானத்தை இழக்க மாட்டார்கள். இவர்கள் ஒருபோதும் மிகையாகவோ அல்லது குறைவாகவோ செயல்பட மாட்டார்கள். எப்பொழுதும் நடுநிலையில் நின்று விளையாடவே விரும்புவார்கள். தன்னை சுற்றி எப்பொழுதும் ஆட்கள் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

மேலோட்டமானவர்கள்

இவர்களிடம் இருக்கும் பெரிய பிரச்சினை அனைவரையும் மேலோட்டமாக நம்பிவிடுவார்கள். மற்றவர்களின் வெளித்தோற்றத்திலும், அழகிலும் எளிதில் மயங்கி விடுவார்கள். அவர்களின் உள்ளூர குணங்களை கவனிக்கவோ அல்லது அதில் அக்கறை செலுத்தவோ மாட்டார்கள்.

எளிதில் விலகிவிடுவார்கள்

இந்த ராசிகளில் பிறந்தவர்கள் உறுதியான மற்றும் வலிமையானவர்கள், ஆனால் சிலசமயம் இவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப அனைவரிடம் இருந்தும் விலகி இருக்கவும், சிலரை வெறுக்கவும் இவர்கள் செய்வார்கள். மற்றவர்களை காயப்படுத்த கூடாது என்பதற்காகவே இவர்கள் விலகி இருப்பார்கள்.

நம்பகத்தன்மையற்றவர்கள்

துலாம் ராசிக்கார்கள் மற்றவர்களின் கருத்துக்களால் எளிதில் தாக்கப்பட்டு தங்கள் மனதை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்களா என்பது சந்தேகமே.

சந்தேகம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை முடிவெடுப்பதாகும். ஒன்றுக்கு மேற்பட்ட வாய்ப்புகள் இருக்கும்போது அதில் எது சிறந்தது என்பதை தேர்ந்தெடுப்பதில் இவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். சரியான முடிவெடுப்பது இவர்களுக்கு எப்பொழுதுமே கடினமான காரியம்தான்.

46786 total views