இந்த ராசிக்காரர்கள் ஒரே குடும்பத்தில் இருந்தால் ஆபத்து நிச்சயமாம்.. எந்தெந்த ராசியினர் தெரியுமா?..

Report
1080Shares

ஒருவர் மகிழ்ச்சியாய் வாழ பணத்தை காட்டிலும் முக்கியமான தேவை எதுவெனில் எது குடும்பம்தான். சமூகத்தில் ஒருவரின் அடையாளம் என்பது அவர்களின் குடும்பத்தின் மூலம்தான் அவர்களுக்கு கிடைக்கிறது. குடும்பம் என்பது பல்வேறு குணங்களும், பண்புகளும் கொண்டவர்கள் ஒரே இடத்தில் வசிக்கும் இடமாக இருந்தாலும் குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

ஒவ்வொருவருக்குமே அவர்களுக்கென தனிப்பட்ட பலமும், பலவீனமும் இருக்கும். அவர்களின் முன்னேற்றத்திற்கு அவர்களின் குடும்பம் எப்பொழுதும் உறுதுணையாக இருக்க வேண்டும். குடும்பத்தின் மகிழ்ச்சியை நிர்ணயிப்பதில் அதன் உறுப்பினர்களின் ராசிகள் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஏனெனில் பொருந்தாத இரண்டு ராசிகள் ஒரே வீட்டில் இருக்கும்போது அவர்களுக்குள் அடிக்கடி மோதல்கள் வருவதுடன் அது குடும்பத்தின் நலனையும் பாதிக்கும்.

ஜோதிட காரணங்கள் ஒரு உறவு சுமூகமாக நீடிக்க வேண்டுமெனில் அவர்களுக்கிடையே புரிந்துணர்வு இருக்க வேண்டியது அவசியமாகும். இதே நிபந்தனை குடும்பத்திற்கும் பொருந்தும். வெளியில் அமைதியாக இருப்பவர்கள் கூட வீட்டில் மற்றவர்களுடன் ஏன் ஓயாமல் சண்டை போடுகிறார்கள் என்று நீங்கள் யோசித்துள்ளீர்களா? அதற்கு காரணம் பொருந்த ராசிகள்தான். எந்தெந்த ராசிகள் ஒரே வீட்டில் இருக்கக்கூடாது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

மேஷம் - கடகம் - விருச்சிகம்

நெருப்பின் சின்னமான மேஷ ராசியில் பிறந்தவர்கள் ஆற்றல் நிறைந்தவர்களாக இருப்பார்கள், ஆதலால் அவர்களால் அதிக உணர்ச்சிவசப்படும் கடக ராசி போன்றவர்களிடம் சுமூகமாக பழக இயலாது. அதேசமயம் சுதந்திரமாய் இருக்க விரும்பும் விருச்சிக ராசிக்கும் தலைமை பொறுப்பில் இருக்க வேண்டுமென்று விரும்பும் மேஷ ராசிக்கும் சுத்தமாக ஒத்துப்போகாது.

உறவு எப்படி இருக்கும்?

இவர்களுக்கிடையேயான உறவு முற்றிலும் புறக்கணிக்க கூடியதாக இருக்காது, இருந்தாலும் மேஷ ராசிக்கும், கடக ராசிக்கும் இடையேயான உறவு வெறுப்பு நிறைந்ததாக இருக்கும். அதேசமயம் மேஷம் மாறும் விருச்சிக ராசியை பொறுத்த வரையில் அவர்களுக்கு இடையே தொடர்ச்சியாக கருத்து மோதல்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.

கும்பம் - மிதுனம் - மீனம்

கும்ப ராசியின் உற்சாகமான மற்றும் சுறுசுறுப்பான அணுகுமுறை குடும்பத்தில் மகிழ்ச்சியை சேர்க்கலாம், ஆனால் அது மற்றவர்களிடம் சோம்பேறித்தனம் எட்டி பார்க்காத வரைதான். மீன ராசிக்காரர்கள் எப்பொழுதும் கனவு காண்பவர்கள், அதேசமயம் மிதுன ராசிக்காரர்கள் எப்படி பேசவேண்டும் என்ற யோசனை இல்லாதர்கள் இவர்கள் பெரும்பாலும் மற்றவர்களை காயப்படுத்தும்படி பேசுவார்கள். கும்ப ராசிக்கார்கள் இந்த எந்த பிரச்சினையிலும் தலையிடாமல் ஓரமாய் நிற்பார்கள்.

உறவு எப்படி இருக்கும்?

மிதுன ராசிக்கார்கள் மற்றவர்களிடம் இருந்து விலகி இருக்க விரும்புவார்கள், அதேசமயம் மீன ராசிக்காரர்கள் அதிக ஆதரவை எதிர்பார்ப்பார்கள். இதனால் இவர்களுக்குள் தொடர்ச்சியான சண்டைகளும், வாக்குவாதங்களும் எழும். கும்ப ராசிக்காரர்கள் தங்கள் நலனில் மட்டும் அக்கறை செலுத்துவார்கள்.

சிம்மம் - ரிஷபம் - கன்னி

சிம்ம ராசியும் சரி, ரிஷப ராசியும் சரி இருவருமே தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடிப்பவர்கள். பிடிவாதம் பொதுவாக இருந்தாலும் இருவரின் தேவைகளும் வெவ்வேறாக இருக்கும். கன்னி ராசிக்காரர்கள் இதற்கே நேர்மாறாக அமைதியானவர்களாக இருப்பார்கள். அவர்களால் இவர்களை சமாளிப்பது என்பது முடியாத காரியம்.

உறவு எப்படி இருக்கும்?

கன்னி ராசிக்காரர்கள் அமைதியாக இருப்பதால் அவர்கள் மற்ற இருவர்களிடையே என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் தனக்கென என்று இருந்து விடுவார்கள். உறவு சீராக இருக்க ஒருவரையொருவர் மதிக்க வேண்டும். இந்த கூட்டணியில் அதனை எதிர்பார்க்க முடியாது.

மகரம் - துலாம் - தனுசு

மகர ராசிக்காரர்களின் கட்டுப்படத்தும் குணம் எப்பொழுதும் அவர்களை துலாம் ராசிக்காரர்களின் விட்டுக்கொடுத்து போகும் குணத்தை பயன்படுத்தி கொள்ள தூண்டும். தனுசு ராசியை பொறுத்தவரை அவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும், அன்பாகவும் இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள், அதனால் சண்டையில் ஈடுபட தயங்குவார்கள். இதனால் அவர்கள் பெரும்பாலும் வீட்டில் இருப்பதையே தவிர்ப்பார்கள்.

உறவு எப்படி இருக்கும்?

மகர ராசிக்கார்கள் எதையும் கொஞ்சம் சீரியஸாகவே அணுகுவார்கள் ஆனால் துலாம் ராசிக்காரர்களோ அனைத்தையும் ஜாலியாக அணுகுவார்கள். மகர ராசிக்கும், தனுசு ராசிக்கும் சுத்தமாக ஒத்துப்போகாது. இதனால் குடும்பத்தில் பல விரிசல்கள் உண்டாகலாம்.