இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்! அதிர்ஷ்டம் தேடி வர இப்படி வழிபடுங்கள்

Report
194Shares

மக்களுக்கு மிகவும் பிடித்த நெருக்கமான கடவுள்கள் என்றால் அது ஆஞ்சநேயரும், விநாயகரும்தான். சக்திவாய்ந்த கடவுள்களில் ஒருவரான ஆஞ்சநேயரை தினமும் வழிபடுவது உங்கள் வாழையில் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் அதிஷ்டத்தை கொடுக்கும்.

பெரும்பாலும் ஆஞ்சநேயர் தனியாக இருக்கும் சிலையைத்தான் நாம் வணங்குகிறோம்.

ஆஞ்சநேயரின் ஒவ்வொரு உருவத்திற்கு பின்னாலும் ஒரு ரகசியம் இருக்கிறது. அதன்படி ஒவ்வொரு ஆஞ்சநேய வழிபாடும் வெவ்வேறு பலன்களை வழங்கக்கூடும்.

உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஆஞ்சநேய வழிபாடு என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சீதாராம வழிபாடு

இந்த உருவத்தை நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆஞ்சநேயர் இராமரையும், சீதையையும் தலைவணங்கி வழிபடும் உருவம் மிகவும் புகழ்பெற்றதாகும். வீட்டில் இந்த உருவத்தை வைத்து தினமும் வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து துரதிர்ஷ்டத்தையும் விரட்டும்.

வெள்ளை பின்புறம்

பின்புறம் வெள்ளையாக இருக்கும் ஆஞ்சநேயர் உங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பவராக இருக்கிறார். நல்ல வேலை, பதவி உயர்வு, அதிக சம்பளம் வேண்டுபவர்கள் இந்த ஆஞ்சநேயரை வழிபடலாம். இந்த உருவத்தில் ஆஞ்சநேயர் ஆடைகள் கூட அணிந்திருப்பார்.

இராம வழிபாடு

ஆஞ்சநேயர் இராமரின் மீது அளவற்ற பக்தி கொண்டவர் என நாம் நன்கு அறிவோம். அதன்படி ஆஞ்சநேயர் இராமரை பக்தியோடு வழிபடும் உருவத்தை வீட்டில் வைத்து நாம் வழிபடுவது நம் வாழ்வில் அமைதியை ஏற்படுத்தும். மேலும் வாழ்க்கையில் சரியான முடிவெடுக்கும் ஆற்றலையும் நமக்கு வழங்கும்.

திசை ஆஞ்சநேயர்

வடக்கு திசை நோக்கி அமர்ந்து தியானம் செய்வது போன்ற உருவத்தை வழிபடுவது உங்களுக்கு அனைத்து கடவுள்களின் ஆசீர்வாதத்தையும் பெற்றுத்தரும் என்று புராணங்கள் கூறுகறது. அதேபோல் தெற்கு திசையில் இருக்கும் அனுமனை வழிபடுவது மரணம் பற்றிய உங்களின் பயத்தை போக்கும்.

எள்

எள் என்பது ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்த பொருளாகும். எனவே சனிக்கிழமையன்று நீங்கள் குளிக்கும் நீரில் சிறிது எள்ளை கலந்து சேர்த்து குளிக்கவும். அதேபோல கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு எள் விளக்கு ஏற்றி வழிபடவும். இது உங்கள் வேண்டுதல்களின் நிறைவேறும் வாய்ப்பை அதிகரிக்கும்.

படுக்கையறை

அனுமான் ஒரு பிரம்மச்சாரி கடவுள் ஆவார். எனவே அவரை படுக்கையறையில் வைத்து வழிபடுதல் கூடாது. அவ்வாறு வைத்து வழிபடுவது குடும்பத்தில் பல பிரச்சினைகளை உண்டாக்கும். எனவே ஆஞ்சநேயரை எப்பொழுதும் பூஜையறையில் வைத்து மட்டுமே வழிபட வேண்டும்.

loading...