உங்க ராசிக்கும் கிரேக்க கடவுளுக்கும் உள்ள தொடர்பு என்ன தெரியுமா?.. 12 ராசிக்குமான தகவல்..!

Report
566Shares

உலகம் முழுவதும் பல்வேறு வகையான ஜோதிட முறைகளும், சின்னங்களும் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அனைத்து கலாச்சாரத்திலும் மொத்தம் 12 ராசிகள்தான் இருந்தன. நாம் பின்பற்றும் ஜோதிட முறையை போலவே துல்லியமான ஜோதிட முறையைத்தான் கிரேக்கர்களும் பயன்படுத்தி வந்தனர். கிரேக்கர்களின் நம்பிக்கை படி நமது ஒவ்வொரு ராசியும் ஒரு நட்சத்திரத்தால் ஆளப்பட்டதாகவும், அவை ஆண்டின் வெவ்வேறு காலங்களில் வானத்தில் தெரியும் என்று கூறுகின்றனர்.

இந்த ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு பின்னாலும் ஒரு சுவாரசியமான கதை உள்ளது. இதில் மேலும் சுவாரசியம் என்னவென்றால் ஜோடியாக் என்னும் பெயர் கிரேக்க வார்த்தையான உயிரினங்களின் வட்டம் என்ற சொல்லில் இருந்து வந்தது. இது அனைத்து உயிரினங்களையும் குறிக்கும். இந்த நட்சத்திரங்கள் எப்படி வானத்தில் தோன்றுகிறது என்பதற்கு பின்னால் கதைகள் பல உள்ளது. இந்த பதிவில் ஒவ்வொரு ராசியின் சின்னத்திற்கும் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன என்று பார்க்கலாம்.

மேஷம்

ராசிகளில் முதல் ராசியான மேஷம் வசந்த காலத்தின் தொடக்கமாக கருதப்படுகிறது. மேஷ ராசியின் கதையானது கோல்டன் ராமுடன் இணைக்கப்பட்டது. இவர் சகோதர, சகோதரியான இரண்டு குழந்தைகள் கடவுளை வழிபடுவதற்காக உயிர் தியாகம் செய்வதில் இருந்து அவர்களை காப்பாற்றியதாக கிரேக்க வரலாறு கூறுகிறது.

ரிஷபம்

ரிஷப ராசியின் சின்னமானது தீசஸ் மற்றும் மினோடவுரின் புராணங்களுடன் தொடர்புடையது. அதன்படி தீசஸ் மினோடவுருக்கு என்னும் தீய அரக்கனுக்கு காணிக்கையாக அளிக்கப்பட்டவர். ஆனால் தீசஸ் மற்றொரு மாவீரர் அரிடேனுடன் இணைந்து அந்த அரக்கனை அழித்து ஏதென்ஸ் நகரை காப்பாற்றினர்.

மிதுனம்

மிதுன ராசியின் கதையானது இரட்டை சகோதரர்களான கேஸ்டர் மற்றும் பாலிசிடோஸுடன் தொடர்புடையது. இந்த கதையின் படி கடவுள்களின் அரசரான ஜீயஸ், லேடா என்னும் ஸ்பார்ட்டன்களின் ராணியின் அழகில் மயங்கி அவருடன் தொடர்பு வைத்ததை பற்றியதாகும். இந்த தொடர்பின் மூலம் பிறந்தவர்கள்தான் கேஸ்டர் மற்றும் பாலிசிடோஸ் ஆவர். கடவுளின் புதல்வர்களான இவர்கள் இறுதிவரை ஒன்றாகவே வாழ்ந்தார்கள் இறக்கும்போது கூட ஒன்றாகவே இறந்தார்கள்.

கடகம்

கடக ராசியின் சின்னமான நண்டுக்கு பின்னால் இருக்கும் கதை சுவாரிஸ்யமான ஒன்றாகும். கிரேக்க கடவுளான ஹெர்குலஸ் லெர்னா ஹைட்ரா என்னும் கொடிய நூறு தலைகளை கொண்ட பாம்பை கொல்லும்படி கூறினார். அப்போது ஹெர்குலஸின் எதிரியான ஹெரா ஹைட்ராவிற்கு உதவ ஒரு ராட்சச நண்டை அனுப்பி வைத்தார். அந்த நண்டு ஹெர்குலஸின் காலை தாக்கி அவரை கண்ணீர் விட வைத்தது. ஹெரா அந்த நண்டை கௌரவிக்கும் விதத்தில் அதன் பெயரில் நட்சத்திரம் ஒன்றை உருவாக்கினார். அதுதான் கடக ராசியின் சின்னமாக மாறியது.

சிம்மம்

ஹெர்குலஸால் கொல்லப்பட்ட நெமிலியன் என்பவரின் பெயரால் இந்த நட்சத்திரம் அழைக்கப்படுகிறது. புராணங்களின் படி ஹெர்குலஸ் இபிகா சிங்கத்தை கொன்ற பிறகு அதன் தோலை எடுத்து தனக்கு ஆடையாக அணிந்து கொண்டார். எந்த ஆயுதமும் இந்த தோலை தாண்டி தாக்க முடியாது. பின்னர் இந்த சிங்கம் வானத்தில் நட்சத்திரமாக ஜீயசால் அங்கீகரிப்பட்டது.

கன்னி

இந்த நட்சத்திரத்தின் கதையானது டெமெட்டர் மற்றும் அவரின் மகள் பெர்சியோன் ஆகியோருடன் தொடர்புடையது. இந்த கதை பருவங்களின் மாற்றத்தை விளக்கும். இந்த மாதத்தில் பருவநிலைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படும்.

துலாம்

இதன் அடையாளமானது தராசாகும், இது சமநிலையை பிரதிபலிக்கிறது. இது டைக் கடவுளின் சின்னமாகும், நீதியை காக்கும் இந்த கடவுளின் ராஜ்ஜியம் பாதாளத்தில் இருந்தது. கிரேக்கர்கள் நீதியின் மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்தார்கள். எனவே இதற்கு வானத்தில் நிரந்தர இடம் கொடுத்திருந்தார்கள்.

விருச்சிகம்

விருச்சிகத்தின் கதையானது ஓரியனை சுற்றியுள்ள கதையாகும். ஓரியன்தான் உலகிலேயே அதிக அழகு வாய்ந்தவராக இருந்தார். அவர் தனது நாய்களுடன் எப்பொழுதும் இருப்பார். ஓரியன் பல பெருமைகளை உடையவனாக இருந்ததால் மகாராணி கையா அவனை கொள்வதர்க்கு தேள் ஒன்றை அனுப்பினார். தேளும் ஓரியனை கடித்து கொன்றது. அதனை கௌரவிக்கும் விதமாக அதனை நட்சத்திரங்களில் ஒன்றாக மாற்றினார் கையா.

தனுசு

சென்டவுர்சை ஆண்ட புகழ்பெற்ற மன்னரான செய்ரான் நினைவாக இந்த பெயர் அழைக்கப்பட்டது. இவர் பாதி கடவுள் என்றும் அப்பல்லோவின் புரட்சியாளன் என்றும் புராணங்கள் கூறுகிறது.

மகரம்

மகர ராசியின் கதையானது கடவுள்களின் அரசரான ஜீயஸின் பிறப்புடன் தொடர்புடையது. பல அற்புத சக்திகளையும், பெருமைகளையும் கொண்ட இவர் கிரேக்கம் முழுவதையும் ஆண்டார்.

கும்பம்

கும்ப ராசியின் கதையானது ட்ராஸ் மன்னரின் மகனான கனிமெட்டுடன் தொடர்புடையது ஆகும். இவர் ஒருமுறை கிரேக்க கடவுள்களின் புனித தேனை குடித்து விட்டார். அதன்மூலம் கிரேக்க ஜோதிடத்தில் அழியா இடத்தை பெற்றார்.

மீனம்

மீன ராசியின் இரட்டை மீன்கள் சின்னமானது காதல் மற்றும் அழகின் கடவுளான அப்ரோடைட்டிடம் இருந்து பெறப்பட்டதாகும். அப்ரோடைட்டும் அவர் மகன் ஈரோஸும் ஒருமுறை ஆழ்கடலில் குதித்தார்கள், அதுவே இரட்டை மீன் சின்னமாக மாறியது.

22639 total views