எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரரருக்கு ஒன்றும் பலிக்காது.. கும்ப ராசிக்கு எச்சரிக்கை..!

Report
1039Shares

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் சிலருக்கு காபியில் தொடங்கும். சிலருக்கு செய்தித்தாளில் ராசிபலன் பார்த்த பின்பு தான் எல்லாமே. அப்படிப்பட்டவர்களுக்காக இன்றைக்கு எந்த ராசிக்கு என்ன பலன்கள் என்று தெரிந்து கொள்வோமா... அப்படி இன்னைக்கு கும்ப ராசிக்காரர் எதிலும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தேவையில்லாத விவாதங்களையும் முன் பின் தெரியாத புதிய ஆட்களிடம் பேசுவதையும் முற்றிலும் தவிர்த்திடுவது நல்லது.

மேஷம்

திருமண காரியங்கள் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பிரபலமானவர்களுடைய அறிமுகங்கள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுக்கு உயர் அதிகாரிகளின் மீதான நம்பிக்கை அதிகமாகும். உங்களைச் சுற்றி உள்ளவர்களின் ஆதரவு உங்களுக்குப் பெருகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

ரிஷபம்

வீடு மற்றும் மனைகளின் மூலமாக லாபங்கள் உண்டாகும். நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொழில் சம்பந்தமான முயற்சிகளில் நீங்கள் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர்கள். உயர்கல்வி பயில்கின்ற மாணவர்கள் தங்களுக்கு சாதகமான நாளாக மாற்றிக் கொள்வார்கள். செய்கின்ற தொழிலில் திருப்தி ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மிதுனம்

மாணவர்களுக்கு தங்களுக்குப் பிடித்த இடத்தில் உயர்கல்வி பயிலும் வாய்ப்புகள் உருவாகும். கடல்வழிப் பயணங்களின் மூலமாக நன்மைகள் உண்டாகும். பொன் மற்றும் பொருள் சேர்க்கைகள் ஏற்படும். வெளிநாட்டு வேலை தொடர்பான முயற்சிகள் நிறைவேறும். வீடு மற்றும் மனை விருத்திக்கான பணிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நன்மை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கடகம்

நீங்கள் எந்தவொரு காரியத்தைச் செய்தாலும் அதில் கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் இருப்பது நல்லது. தேவையில்லாத வீண் அலைச்சல்கள் உண்டாகும். கடன் தொல்லைகள் குறைய ஆரம்பிக்கும். அரசு அதிகாரிகளுடைய நட்பு உண்டாகும்.

புதிதாக வேலை தேடுகிறவர்களுக்கு சாதகமான பலன்கள் உருவாகும். சுய தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கு மேன்மையான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

சிம்மம்

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு துறை சார்ந்த அறிவு மேம்படும். அரசாங்கத் தரப்பிடமிருந்து எதிர்பார்த்த பலன்கள் கைக்கு வந்து சேரும். ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும். தொழில் சம்பந்தப்பட்ட அலைச்சல் உண்டாகும். ஆனாலும் அதன்மூலம் லாபம் அடைவீர்கள். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கன்னி

உங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழிலில் இதுவரையிலும் இருந்து வந்த எதிர்ப்புகள் குறைய ஆரம்பிக்கும். விலையுயர்ந்த பொருள்களோ ஆவணங்களோ வெளியில் எடுத்துச் செல்லும் போது கவனமாக இருப்பது நல்லது. உங்களுடைய பழைய எண்ணங்களினால் மன வருத்தங்கள் உண்டாகும். பெற்றோர்களின் ஆதரவினால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். கால்நடைகள் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர்சிவப்பு நிறமும் இருக்கும்.

துலாம்

நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் உதவிகள் கைக்கு வந்து சேர கால தாமதங்கள் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்திருந்த பண வரவுகள் கைக்கு வந்தவுடன் மகிழ்ச்சி பெருகும். பயணங்களின் மூலம் மனம் புத்துணர்ச்சி அடைவீர்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. எதிர்பாலின மக்களின் மூலமாக அனுகூலங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

வீட்டில் கணவன், மனைவிக்கு அடையே கொஞ்சம் அனுசரித்துப் போவது நல்லது. தேவையில்லாத வாக்குறுதிகள் கொடுப்பதை நிறுத்துவது நல்லது. சுப செய்திகளின் வாயிலாக சுப விரயச் செலவுகள் உண்டாகும். உங்களுடைய வாதத்திறமையால் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். வெளியூா பயணங்களால் உங்களுக்கு அனுகூலமான சூழல்கள் உருவாகும். அடுத்தவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

தனுசு

மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த செயல்களைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்துவது நல்லது. இதுவரையிலும் நிலுவையில் இருந்து வந்த பண வரவுகள் கைக்கு வந்து சேரும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையினால் அனைவரையும் கவர்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மகரம்

நீங்கள் நினைத்த காரியத்தைச் செய்து முடிப்பதற்கு கொஞ்சம் அதிக உழைப்பைப் போட வேண்டியிருக்கும். வாகனங்களில் செல்லுகின்ற பொழுது கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் எதிர்பார்த்திருந்த பண வரவுகளின் மூலம் மனம் மகிழ்ச்சி ஏற்படும். தொழில் சம்பந்தப்பட்ட போட்டிகளைச் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

கும்பம்

வீட்டில் உள்ளவர்களுடைய தேவைகளைப் புரிந்து கொண்டு அதை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்குகள் உயர ஆரம்பிக்கும். நண்பர்களின் மூலம் உங்களுக்குப் பொருனாதார உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களுடைய நம்பிக்கையைப் பெறுவீர்கள். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

மீனம்

தொழிலில் சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். உங்களுடன் பிறந்த சகோதரர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருந்து உதவுவார்கள். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள் மனமும் அதனால் தெளிவு பெறும். வம்பு மற்றும் வழக்குகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒரு முடிவு ஏற்படும். உங்களுடைய நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடிவு செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீல நிறமும் இருக்கும்.

40822 total views