இந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் தனிமையை மட்டுமே விரும்புவார்களாம்... ஏன் தெரியுமா?

Report
267Shares

நமது சமூகம் என்பது பலதரப்பட்ட மக்களால் கட்டமைக்கப்பட்டது. இதில் சிலர் நம்முடன் ஒத்துப்போவார்கள் சிலர் ஒத்துப்போக மாட்டார்கள். ஆனால் அனைவருடனும் சேர்ந்து வாழ்வதே நமக்கு இருக்கும் ஒரே வழி. சிலர் இதனை புரிந்துகொண்டு சேர்ந்து வாழ்வார்கள். சிலர் தங்கள் தனித்துவத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் தனிமையை விரும்புவார்கள்.

இப்படி தனிமையை விரும்புபவர்கள் பெரும்பாலும் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், தெளிவான குறிக்கோள் உடையவராகவும் இருப்பார்கள். தனிமை என்னும்போது இவர்கள் எப்பொழுதுமே தனிமையில் இருப்பவர்கள் அல்ல அனைவருடனும் பழகினாலும் சரியான இடைவெளி விட்டு பழகுவார்கள்.

இது அவர்களின் பிறவியிலேயே வருவது, அதற்கு அவர்களின் ராசியும் கூட ஒரு காரணம். எந்தெந்த ராசியில் பிறந்தவர்கள் தனிமையை விரும்புவார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் நண்பர்களுடன் இருப்பதை எப்பொழுதும் விரும்புவார்கள். ஆனால் அதற்காக அவர்கள் தனியாக இருக்க முடியாது என்று அர்த்தமல்ல. உண்மையில் சொல்லபோனால் அவர்கள் தனிமையில் அவர்கள் நேரத்தை அதிகம் பயன்படுத்தி மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

24 மணி நேரமும் அவர்களின் மனதிற்குள் மிகப்பெரிய விஷயங்களும் கடலளவு சிந்தனைகளும் அவர்கள் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கும். இந்த வேலைகளை அவர்கள் தனிமையில் இருக்கும்போது செய்து முடிப்பார்கள். மிகவும் உணர்ச்சிவசப்பட கூடிய ராசியான அவர்கள் மனதளவில் காயப்படும்போது அதிலிருந்து மீண்டு வரும்வரை தனிமையில்தான் இருப்பார்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் மூளையில் பிஸியாகவே இருப்பார்கள். அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் அவர்களை சுற்றி யார் இருக்கிறார்கள் என்பதை பற்றிக்கூட கவலைப்பட மாட்டார்கள். அவர்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உடலளவில் அங்கே இருப்பார்களே தவிர மனதளவில் இருக்கமாட்டார்கள். அவர்களின் எண்ணங்கள் படிப்பது, சமைப்பது போன்றவற்றை சுற்றி இருக்கும்.

இவைதான் அவர்களுக்கு சிறந்த நண்பர்களாக இருப்பது. சில கன்னி ராசிக்காரர்கள் அதிக கூச்ச சுபாவம் உள்ளவர்களாக இருப்பார்கள். மக்கள் அவர்களை சுற்றி இருக்கும்போது அவர்கள் அசௌகரியமாக உணருவார்கள். அதனாலேயே அவர்கள் தனிமையை விரும்புவார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் பெரும்பாலும் நண்பர்களுடன் இருப்பதை விரும்புவார்கள் அதனால் அவர்கள் மகிழ்ச்சியாகவும் உணருவார்கள். ஆனால் அவர்கள் அனைத்திலும் ஆர்வத்துடன் இருப்பார்கள். அவர்களின் வேலையாக இருந்தாலும் சரி, வேறு எந்த விஷயமாக இருந்தாலும் சரி அவர்கள் அதற்கு வித்தியாசமான வடிவம் கொடுப்பார்கள். எந்த வேலையாக இருந்தாலும் முழுஅர்பணிப்புடன் செயல்படுவார்கள். அதுபோன்ற சமயங்களில் முழுநேரமும் வேலையை மட்டுமே கவனிப்பார்கள். அவர்கள் எந்த வேலையிலும் ஈடுபடாத போது மட்டுமே இவர்களுடன் இருப்பது மற்றவர்களுக்கு நல்லது இல்லையெனில் அவர்கள் யாரையும் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.

மகரம்

உங்கள் நண்பர்களில் ஒருவர் ஒருநாள் நண்பர்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஒருநாள் யாருடனும் பேசாமல் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டே இருப்பதை கவனித்து இருக்கிறீர்களா? அப்படி இருந்தால் அவர்கள் நிச்சயம் மகர ராசிக்காரர்களாக இருப்பார்கள். பெரும்பாலான மகர ராசிக்காரர்கள் அறிவார்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் தனியாக இருக்க விரும்புகிறவர்கள், சில சுயமுயற்சிகளை பரிசோதிப்பார்கள் எனவே பொழுதுபோக்கில் நேரத்தை வீணாக செலவழிக்க விரும்பமாட்டார்கள். அவர்களின் முயற்சிகள் வெற்றியடைந்த பின்புதான் அவர்கள் வெளியுலக நண்பர்களுடன் நேரத்தை செலவழிப்பார்கள்.

கும்பம்

படத்துக்கு போவதாக இருந்தாலும் சரி, பயணம் மேற்கொள்வதாக இருந்தாலும் சரி, வீட்டில் தங்குவதாக இருந்தாலும் சரி ப்ராஜெக்ட்களை முடிப்பதாக இருந்தாலும் சரி அவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். ஒரு செய்தி பற்றிய இவர்களுடைய கருத்தானது மற்றவர்களிடம் இருந்து எப்போதும் வித்தியாசமாகவே இருக்கும். பயணம் செய்யும்போது படிப்பது, தனியாக காபி குடிக்க செல்வது, எங்கு செல்வதாக இருந்தாலும் தனியாக செல்வது போன்ற செயல்களை செய்வார்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் அவர்களின் சொந்த உலகத்தில் வாழ்பவர்கள். அவர்களுக்கு பிடிக்காதவர்கள் மற்றும் தொல்லை தருபவர்கள் உடன் இருப்பதை விட தனியாக இருப்பதே சிறந்தது என்பதை உணர்ந்தவர்கள் இவர்கள். அவர்கள் எப்பொழுதும் கனவு காண்பவர்கள், எனவே அவர்களுக்கு எப்பொழுதும் மற்றவர்களின் துணை தேவையில்லை. ஒருவேளை அவர்களுக்கு யாரவது தேவைப்பட்டால் அது அவர்கள் இரகசியங்களை பகிர்ந்து கொள்வதற்காகத்தான் இருக்கும். அதுவும் கொஞ்ச காலம்தான். மீன ராசிக்காரர்கள் எப்பொழுதும் அவர்களுடன் இருப்பதிலேயே திருப்தி அடைவார்கள்.

8779 total views