ஒரே ஒரு ரூபாயில் கிடைக்கும் சானிடைஷர்... இவ்வளவு மலிவாக எங்க கிடைக்குதுனு தெரியுமா?

Report
581Shares

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் மத்தியில் சானிடைசர் மற்றும் மாஸ்க் இவற்றிற்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில் சென்னையில் தயாரிப்பு நிறுவனமான கவின்கேர், குறைந்தது இரண்டு முறை பயன்படுத்தக்கூடிய 2 மிலி சானிடைசர் சாஷேவை ஒரு ரூபாய்க்கு அறிமுகம் செய்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

சிக், நைல், ராகா வகைகளில் குறித்த நிறுவனம் தனிநபர் நல பொருட்களை கடந்த 30 ஆண்டுகளாக தயாரித்து வருகின்றது.

இந்நிலையில் இந்த நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் ஒரு ரூபாய் சானிடைசர் பாக்கெட் அடித்தட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

இவற்றின் மூலப்பொருட்கள் இந்தியாவில் பல பகுதியிலிருந்து பெற்றுக்கொள்ளும் இந்நிறுவனம், பத்துலட்சத்திற்கும் மேற்பட்ட மளிகைக் கடைகளில் கிடைக்கும் என்று கவின்கேர் நிறுவனர் சி.கே.ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

loading...