வெளியே சென்று வருபவர்களே! கட்டாயம் இதை மறக்காமல் செய்திடுங்க...

Report
912Shares

உலகம் முழுவதும் உள்ள மக்களை கொரோனா தீவிரமாக அச்சுறுத்தி வருகிறது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவை கடுமையாக அமல்படுத்தி வருகின்றன. உலக சுகாதார அமைப்பு, மத்திய அரசு, மாநில அரசுகள் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அவ்வப்போது விளக்கம் வெளியிட்டு வருகின்றன.

தேவையில்லாத வதந்திகளை நம்பாமல் அதிகாரப்பூர்வ இணையதளம், அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்த நிலையில் காய்கறி, மருந்து, மளிகை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியில் செல்வோர் பயன்படுத்த வேண்டிய விதிமுறைகளை தற்போது பார்க்கலாம்.

 • வீட்டில் இருந்து வெளியே செல்வதற்கு முன் முகக்கவசம் அணிவது வேண்டும்.
 • வெளியே செல்பவர்கள் வெளியிடங்களில் உள்ள கதவின் கைப்பிடி, லிப்ட் பட்டன் உள்ளிட்ட இடங்களை தொடுவதற்கு டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தலாம். பயன்படுத்திய டிஷ்யூ பேப்பரை குப்பைத் தொட்டிக்குள் உடனடியாக போட்டு விட வேண்டும்.
 • அவ்வப்போது கிருமி நாசினி கொண்டோ அல்லது சோப் பயன்படுத்தியோ உங்களது கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.
 • கைகளை நேரடியாக மூக்கு, கண்கள், முகத்தில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
 • ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திய பிறகு கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தவும்.பணி முடிந்து வீடு திரும்பும்போது காலணிகளை வெளியே கழற்றி விட வேண்டும்.
 • வீட்டிற்குள் நுழைந்ததும் எந்த ஒரு பொருளையும் தொடாமல், கை-கால்களை நன்றாக சுத்தம் செய்து கழுவிய பின்னர் பொருட்களை பயன்படுத்தலாம்.
 • வெளி இடத்திற்கு எடுத்துச் சென்று பயன்படுத்திய வண்டி சாவி, வாலெட் உள்ளிட்ட பொருட்களை ஏதாவது ஒரு பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.
 • உங்களது மொபைல் போன்களை கிருமி நாசினி கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.
 • வெளியில் இருந்து வந்ததும் அணிந்திருக்கும் உடைகளை உடனடியாக துவைக்க போட வேண்டும். துவைத்து விடுவது முற்றிலும் சிறந்தது.
 • வீட்டிற்குள் வந்ததும் வாய்ப்பு இருப்பின் குளிக்கலாம் அல்லது கை, கால், முகத்தை நன்றாக கழுவ வேண்டியது அவசியம்.
 • வெளியிலிருந்து கொண்டு வரும் பொருட்களை பிளீச் கலந்த நீரில் சுத்தம் செய்ய வேண்டும்.
 • கையுறைகளை அணிந்து இருந்தால் அவற்றை அகற்றிய பின் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

loading...