பயங்கர வேகத்தில் பூமியை நோக்கி வரும் ராட்சத விண்கல்.. மொத்தமாக பூமி அழியும் அபாயம்! நாசா விடுத்த எச்சரிக்கை

Report
403Shares

பூமியை நோக்கி பிரம்மாண்டமான விண்கல் ஒன்று வந்து கொண்டு இருப்பதால், அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு தற்போது தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றது.

பூமியை அவ்வப்போது விண்கற்கள் கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்னும் சில வருடங்களில் பூமியை நோக்கி பாரிய விண்கல் ஒன்று வரவுள்ளது.

இந்த விண்கல்லுக்கு அமெரிக்காவின் நாசாவானது அழிவுகளின் கடவுள் என்று பெயர் வைத்துள்ளது. ஆனால் இதன் அறிவியல் பெயர் 99942 Apophis என்பதாகும். இது தற்போது 340 மீற்றர் அளவில் பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டு இருக்கிறது.

பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லும் இந்த விண்கல்லானது பூமியில் இருந்து வெறும் 30 ஆயிரம் கிலோ மீட்டர்கள் தொலைவில் இது கடந்து செல்லும். அதுமட்டுமின்றி பூமியை நெருங்கி வந்ததிலேயே இதுதான் மிகப்பெரிய விண்கல் ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.

இது பூமியில் மோதினால் மொத்தமாக பூமியை அழிக்கும், அந்த அளவிற்கு இது வலுவானது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இது பூமி வட்டப்பாதையில் சுற்றும் அனைத்து சாட்டிலைட்டுகளை அழிப்பதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது 40 ஆயிரம் கிலோ மீற்றர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டு இருக்கும் இந்த விண்கல், சூரிய குடும்பத்தை நெருங்கிய பின் ஈர்ப்பு விசை காரணமாக இன்னும் வேகமாக செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் எப்போது வேண்டுமானாலும் இது பூமியை நெருங்கலாம் என்று கூறப்படுகின்றது.

2029ம் ஆண்டிற்குள் பூமியை கடக்கும் இந்த விண்கல்லால் என்னவேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

15749 total views