வைரமுத்து பற்றி பேச என் கணவரிடம் விவாதித்தேன்... சின்மயி ஓபன் டாக்!...

Report
839Shares

கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் புகார் பற்றி ஏன் இவ்வளவு நாள் ஏன் கூறவில்லை என பாடகி சின்மயி விளக்கம் அளித்துள்ளார்.

13 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பாடல் நிகழ்ச்சிக்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்த போது, கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அவரது தாயாரும் அதை உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு வைரமுத்து மற்றும் சுவிட்சர்லாந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுரேஷ் இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், 13 ஆண்டுகள் கழித்து இப்போது ஏன் பேசுகிறீர்கள்? அப்போதே ஏன் இதுபற்றி பேசவில்லை? என சமூக வலைத்தலங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு பதில் கூறியுள்ள சின்மயி, அப்போது எனக்கு தைரியம் வரவில்லை. அதற்கான சூழல் இல்லை. இதுபற்றி என் கணவரிடம் விவாதித்தேன். அதன் பின்னரே எனக்கு தைரியம் வந்துள்ளது” என கூறியுள்ளார்.

25837 total views