நிச்சயதார்த்தத்தில் கசந்த நடிகையின் காதல்.... திருமணத்தில் பிரிந்த உறவு....

Report
141Shares

பிரபல கன்னட நடிகை ராஷ்மிகா. தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய கீதா கோவிந்தம் படத்திலும் நடித்துள்ளார்.

ராஷ்மிகாவுக்கும் கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டிக்கும் காதல் மலர்ந்தது. ‘கிர்ரிக் பார்ட்டி’ என்ற கன்னட படத்தில் ஜோடியாக நடித்தபோது நெருக்கமாகி காதல் வயப்பட்டார்கள்.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். கடந்த வருடம் ராஷ்மிகா-ரக்‌ஷித் ஷெட்டி நிச்சயதார்த்தம் நடந்தது. பல மாதங்கள் ஆகியும் திருமணம் நடக்கவில்லை. திருமணத்தில் ராஷ்மிகா ஆர்வம் இல்லாமல் இருந்தார். இருவரும் பிரிந்து விட்டதாக கிசுகிசுக்கள் வந்தன. அதனை அவர்கள் மறுத்து வந்தார்கள்.

இந்த நிலையில் திருமணத்தை ராஷ்மிகா நிறுத்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது நெருங்கிய உறவினர்கள் இதனை உறுதிப்படுத்தி உள்ளனர். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு ராஷ்மிகாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. நடிப்பில் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதனால் ராஷ்மிகா-ரக்‌ஷித் ஷெட்டி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதுவே திருமணத்தை ரத்து செய்ய காரணம் என்று கூறுகிறார்கள். இவர்களை சேர்த்து வைக்க இருவீட்டு உறவினர்களும் முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்து விட்டது என்கின்றனர். பெற்றோர்களுடன் கலந்து பேசி அவர்கள் சம்மதத்துடன் ராஷ்மிகா திருமணத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

6695 total views