டி.ஆர்.பிக்காக ஒளிப்பரப்படுகிறதா சொல்வதெல்லாம் உண்மை? மனம் திறந்த லட்சுமி ராமகிருஷ்ணன்...

Report
1451Shares

பிரபல ரிவியில் சொல்லவதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். குடும்பத் தகராறை தீர்த்து வைக்கும் வகையில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி மக்களுக்கு தேவையா அவர்கள் அதை எப்படி பார்க்கிறார்கள்? அதனை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்? என்று அவரே ஒரு நேர்காணளில் கூறியுள்ளார்.

எதனால் நான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறேன்?

மக்கள் என்னை ஏற்றுக்கொண்டனர். அதனால் தான் 1500 வது பகுதியை நான் தொகுத்து வழங்குகிறேன். எந்த ஒரு விடயத்தையும் ஒரு பிரபலம் எடுத்து சொன்னால் அது மக்களை எளிதாக சென்று அடையும். அதனால் தான் விளம்பரங்களில் கூட நடிகர்கள் நடிக்கின்றனர்.

எதற்காக பாதிக்கப்பட்டவரின் குடும்ப விடயங்களை டிவியில் ஒளிப்பரப்பபடுகிறது?

இந்த நிகழ்ச்சியில் பேசப்படும் எந்த ஒரு விடயமும் பர்ஸ்னல் கிடையாது. நீங்கள் உங்கள் பிரச்சனையை டிவிஷோ என்று தெரிந்தும் காரணத்தோடு தான் அங்கு வந்து சொல்கிறீர்கள்.

ஒரு கள்ளக்காதல் எல்லை மீறி போகிறது என்றால் அது அவரது குடும்பங்கள், சுற்றத்தார் முன்னிலையில் அவமானபட்டு நிற்பது பெண் தான். இந்நிலையில் தான் அந்த பெண் செல்வதெல்லாம் உண்மைக்கு வருகிறாள்.

அப்போது அந்த பெண் எதற்காக இந்த நிலைக்கு தள்ளப்பட்டால், அது நான்கு பேர் தெரிந்துக்கொள்ளட்டும். நான் செய்த இந்த தவறை வேறு யாரும் செய்திட கூடாது. இதானல் தான் இந்நிகழ்ச்சியில் அவர்கள் கலந்துக்கொள்கிறார்கள். இதுவே ஒளிப்பரப்படுவதற்கான காரணமும்.

டி.ஆர்.பி காக ஒளிப்பரப்படுகிறதா?

வேலை செய்யும் போது நமக்கு ஒரு சமூக அக்கறை, பெருப்புணர்ச்சி இருக்க வேண்டும். நான் திரிஷா இல்லனா நயந்தாரா படத்தில் நடித்திருந்தால் எனக்கும் 15 கோடி லாபம் தான். ஆனால் நான் என் அம்மனி மாதிரியான படங்களில் நடிக்கிறேன்? நான் செய்யக்கூடிய வேலையில் சமூக நலன் சார்ந்த விடயங்கள் இருக்கவேண்டும் அதற்காக தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறேன்.

சேனலில் என்றால் அதற்கென்று ஒரு விதிமுறை உள்ளது அப்படி செய்தால் தான் மக்களை கவர முடியும். அதனால் தான் மக்களும் பார்க்கின்றனர். அவர்கள் பார்த்தால் தான் மற்றவர்களுக்கு நம்மால் உதவி செய்யமுடியும் மேலும் கொண்டு செல்ல முடியும்.

யாரிடமும் நீ அழு என்று நாங்கள் சென்னது கிடையாது. எந்த ஒரு பகுதியிலும் நான் அதை மேலும் சுவாரஸ்யம் செய்ய வேண்டும் என்று எதுவும் செய்யதில்லை. என் மனசாட்சிக்கு விரேதமாக நான் இதுவரை எந்த ஒரு பகுதியும் செய்ததில்லை என்கிறார்.

ஒளிபரப்பப்படாத பகுதிகள் ?

இதில் பல பகுதிகளை நாங்கள் ஒளிப்பரப்புவதில்லை. சில விடயங்கள் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் அல்லது அந்த பெண்கள் பிரச்சனை தீர்ந்துவிட்டால். அந்த நிகழ்ச்சியால் பிரோஜனம் இல்லை என்றால் அந்த நிகழ்ச்சியை நாங்கள் ஒளிப்பரப்ப மாட்டோம். அப்படி பல நிகழ்ச்சிகள் உள்ளது.

61528 total views