கண்களைத் திறந்து பார்க்கும் சிலை! குழந்தை வரம் கொடுக்கும் அதிசயம்.. எங்கு நடக்கின்றது தெரியுமா?

Report
109Shares

கடவுள் பற்றிய எவ்வளவோ கதைகளும் அமானுஷ்ய கதைகளும் சிறு வயதுகளில் நம்முடைய பாட்டியோ தாத்தாவோ சொல்லக் கேட்டிருப்போம். அது ஏதோ பழைய காலத்தில் நடந்த ஒரு வரலாற்றுப் பதிவாகவே இருக்கும்.

ஆனால் நம்முடைய சம காலத்தில் இதுபோன்ற கடவுள் அதிசயக் கதைகளை நம்முடைய நிஜ வாழ்க்கையில் நடந்திருப்பது மிக மிக அரியதாகவே இருக்கும். அப்படி நம் கண்முன்னே கடவுள் சிலை வந்து தனது கண்களைத் திறந்து பார்த்தால் எப்படி இருக்கும்?

பயப்படாதீர்கள். நம் முன் நடந்தால் ஒன்று ஆச்சர்யத்தில் வியற்து போவோம். இல்லையென்றால் மயங்கி விழுந்து விடுவோம். இது வெறும் கதையில்ல.

உண்மையாகவு நம்முடைய தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஆச்சரியம் நடக்கும்போது நாம் போய் பார்க்காமல் இருக்கலாமா?

திருமாலின் விளையாட்டுக்களில் இதுவும் ஒன்றாகத் தான் கருதப்படுகிறது. இந்த அதிசய நிகழ்வு வரதராஜப் பெருமாள் கோவில் நடக்கிறது.

யானைக்கும் முதலைக்கும் அருள் புரிந்ததாக இந்த கரி வரதராஜ பெருமாள் சொல்லப்படுகிறார். நின்ற கோலத்தில் இருக்கும் இந்த பெருமாளுக்கு பௌர்ணமிகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு சனிக்கிழமையும் இற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கும். அதற்கு மிக முக்கிய காரணமே இந்த கோவிலில் நடக்கின்ற அந்த அதிசய நிகழ்வு தான்.

சென்னையில் நெற்குன்றம் பகுதியில் தான் இந்த கரி வரதராஜ பெருமாள் வீற்றிருக்கிறார். கிட்டதட்ட 400 ஆண்டுகளாக இந்த பெருமாள் இங்கே இருக்க்றாராம். சுமார் ஐந்து அடி உயரத்தில் காஞ்சி வரதராஜ பெருமாளைப் போலவே நின்ற கதியில் இருக்கிறார்.

கண்மூடி திறக்கும் பெருமாள்

சனிக்கிழமைகளில் இந்த கரி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் நடைபெறும். அப்போது தான் அந்த அதிசய நிகழ்வு நடக்கிறது. அதனாலேயே அந்த கற்பூர ஆரத்திக்கு தனிச்சிறப்பு உண்டு.

இருட்டு அறைக்குள் பெருமாளுக்கு அருகில் நெய் தீபம் ஏற்றி ஆரத்தி எடுக்கின்ற பொழுது, பெருமான் தன்னுடைய கண்களைத் திறந்து பார்த்து பக்தர்களுக்கு அருள் புரிவது போல் அந்த காட்சி இருக்குமாம். சில சமயங்கிளல் கண்களுக்கு அருகில் தீபம் காட்டும்போது, கண் விழிகள் கூட உருண்டு நகர்வதைப் பார்க்க முடியும் என்கிறார்கள்.

இந்த பெருமாளின் அருள் செயல் கேட்கிற எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துகிறது. எல்லோரையும் அந்த கோவிலுக்கு வரவழைக்கிறது இந்த அருள் காட்சி வருகின்ற எல்லோருக்கும் தெரிவதில்லையாம். பக்தி மனதோடு உருகி நிற்போருக்கே இப்படி காட்சி தருகிறாராம் பெருமாள்.

குழந்தை வரம்
இந்த கோவிலின் உற்சவ பிரகாரத்தில் சந்தான கோபாலன் வீற்றிருபு்பதால், இங்கு வந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டாகுமாம்.
4912 total views