உறவு வைத்துகொண்டால் கொரோனா வைரஸ் பரவுமா?.. என்ன செய்ய வேண்டும்?.. விளக்கமான தகவல் இதோ..!

Report
2615Shares

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால், பலரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான சமூக வாழ்க்கையில் தொடங்கி அந்தரங்க வாழ்க்கை வரை அனைத்திலும் கொரோனா அச்சம் பல்வேறு குழப்பங்களை உருவாக்கியுள்ளது.

அதில் முக்கியமாக, கொரோனா தீவிரமாக உள்ள இந்த காலகட்டத்தில் உறவு கொள்வது கூட கொரோனா பரவ காரணமாக மாறிவிடலாம் என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் உறவு கொள்வது பாதுகாப்பானதா?

  • உறவு கொள்ளக் கூடிய துணையுடன், ஒரே வீட்டில் நீங்கள் வாழ்ந்து வந்தால், அது எந்த வகையிலும் உங்கள் அந்தரங்க வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தாது.
  • ஆனால், உங்கள் இருவரில் ஒருவருக்கு கொரோனா தொடர்பான அறிகுறிகள் இருந்தாலும், நீங்கள் இருவரும் விலகி இருப்பது மிக அவசியம். உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

புதிய நபர்களுடன் உறவு கொள்வது பிரச்சனையை ஏற்படுத்துமா?..

  • புதிய துணையுடன் உறவு கொள்வது பிரச்சனையை ஏற்படுத்தாது எனக் கூற முடியாது. ஏனெனில் அந்த புதிய துணைக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால், அவருடன் நெருக்கமாக இருக்கும்போது நீங்களும் அந்த வைரஸால் பாதிக்கப்படலாம்.
  • எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாமல், இந்த வைரஸ் மனிதர்களின் உடலிற்குள் வாழும் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே சாதாரண முத்தம் கூட ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கொரோனா பரவ காரணமாக இருக்ககூடும்.
முத்தமிட்டால் கொரோனா வைரஸ் பரவுமா?

நீங்கள் முத்தமிட்ட நபருக்கு, கொரோனா தொடர்பான அறிகுறிகள் காணப்பட்டால், உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த அறிகுறிகளின் தீவிரம் அதிகரிக்கும் பட்சத்தில் உடனடியாக சுகாதார அதிகாரிகளுக்கு உங்கள் நிலையை எடுத்துக் கூறுங்கள்.