யாழ் தமிழனுடன் காதல்... மனதை பறிகொடுத்தது இப்படித்தான்!... நடிகை சரண்யா

Report
3941Shares

நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் புகழ்பெற்றவர் நடிகை சரண்யா.

பிரபல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியை தொடங்கிய சரண்யா, ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி படத்தில் நடித்தார்.

அதன்பின்னர் செய்திவாசிப்பாளராகி அபார நடிப்புத் திறமையால் ரசிகர்களின் மனதில்நீ ங்கா இடம்பிடித்துள்ளார்.

இவருக்கும் இலங்கை தமிழரான அமுதன் என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது.

இந்நிலையில் அமுதனை முதன்முதலில் சந்தித்தது பற்றி சரண்யா,

யாழ்ப்பாணத்தை சொந்த ஊராக கொண்ட அமுதனின் குடும்பம் தற்போது லண்டனில் வசித்து வருகின்றனர்.

தொழில் நிமித்தமாக சென்னை வந்தவரை கோவிலில் வைத்து சந்தித்தேன், அவருக்கு என்னை பிடித்து போனதால் எங்கள் வீட்டில் வந்து பெண் கேட்டார்.

நாங்கள் சந்தித்த ஒரு வருடத்திலேயே திருமணமும் நடந்து முடிந்தது.

லண்டனில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு மனவளம் குறித்த ஆலோசனைகள் வழங்கும் பொறுப்பில் என் கணவர் இருக்கிறார்.

அவர் ஒரு சிறந்த மிருதங்க இசைக் கலைஞர், யோகா மற்றும் தியானக் கலையிலும் நிபுணர் என பேசியுள்ளார்.

126744 total views
loading...