8 வருஷம் காதல் பிரிவு!... பொறுக்கின்னு சொல்லிட்டாங்க- பிரபல நடிகர் உருக்கம்

Report
775Shares

எட்டு வருட காதல் பிரிவுக்கு பின்னர் திருமண பந்தத்தில் இணைந்தது குறித்து பேசியுள்ளார் சாந்தனு பாக்யராஜ்- கீர்த்தி.

தமிழ் திரையுலகில் தனக்கென்று முத்திரையை பதித்தவர் பாக்யராஜ், இவரது மகனான சாந்தனு சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் சினிமாவில் ஜொலிக்கவில்லை.

இந்நிலையில் இவரும், நடன இயக்குனரின் மகளுமான கீகீ என்ற கீர்த்தியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இதுபற்றி இவர்கள் அளித்துள்ள பேட்டியில், நாங்கள் பல தடவை காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.

பள்ளியில் காதல், கல்லூரியில் காதல் என கடைசியில் திருமணத்தில் முடிந்தது.

இருமுறை பிரேக் அப் செய்து கொண்டோம், அதிகபட்சமாக எட்டு வருடங்கள் பேசாமல் இருந்தோம்.

விஜய் அண்ணாவிடம் என்னை பொறுக்கி என்றே இவள் சொல்லி இருக்கிறாள்.

ஆனால் திருமணத்திற்கு பின்னர் எனக்காக அவளுக்காக பிடிக்காத விடயங்களை கூட செய்கிறாள், நிறைய மாற்றங்கள் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

கீகி பேசுகையில், இவரும் எனக்காக நிறைய செய்திருக்கிறார், வீட்டு வேலைகளை என்னுடன் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம், கணவன் என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

31662 total views