திருமணத்திற்கு பின்னரும்!... மனைவிக்கு நடிகர் அஜித் செய்து கொடுத்த சத்தியம்

Report
467Shares

கோலிவுட்டில் காதல் தம்பதிகள் என்றவுடன் சட்டென நினைவுக்கு வருபவர்கள் நடிகர் அஜித்- ஷாலினி.

அமர்க்களம் படப்பிடிப்பில் இ்ணைந்து நடித்த போது இவர்களுக்குள் காதல் மலர திருமணம் இனிதே நடந்தேறியது.

கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் ஆகியும், இல்லற வாழ்வில் பிரச்சனை இல்லாமல் வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் அஜித்- ஷாலினி தம்பதியினர்.

இதற்கு காரணம் அஜித் தன்னுடைய குடும்பத்தினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது தான்.

காதலிக்கும் போதே, ஷாலினி சத்தியம் ஒன்றை வாங்கிக் கொண்டாராம், அதாவது வருடத்திற்கு ஒரு படத்திற்கு மட்டுமே கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்றும், மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என கூறினாராம்.

இதை இன்றளவும் அஜித் பின்பற்றி வருவது தெரியவந்துள்ளது, தன்னுடனும், குழந்தைகளுடனும் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்பதுவே ஷாலினியின் ஆசையாக இருந்துள்ளது.

அதுமட்டுமா இப்பவும் படப்பிடிப்புகளுக்கு மனைவி, குழந்தைகளை அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளாராம் அஜித்.

loading...