இலங்கை தமிழரை கரம்பிடித்தது எப்படி? நடிகை ரம்பாவின் சுவாரசிய காதல் கதை

Report
1723Shares

1990களில் தென்னிந்திய ரசிகர்களை தன் அழகால் கட்டிப்போட்டவர் நடிகை ரம்பா.

உழவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார் ஆந்திராவை சேர்ந்த விஜயலட்சுமி(ரம்பாவின் பெயர்).

தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, அருணாசலம், சுந்தர புருஷன், காதலா காதலா உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, போஜ்புரி ஆகிய 6 மொழி படங்களில் நடித்து இருக்கும் ரம்பா, 'திரி ரோசஸ்' என்ற தமிழ் படத்தை தனது சகோதரர் வாசுவுடன் சேர்ந்து சொந்தமாக தயாரித்தார்.

இப்படம் தோல்வியடைய, தொடர்ந்து படங்களில் நடித்து கடனை அடைத்தார்.

இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு கனடாவில் வசிக்கும் இலங்கையை பூர்விகமாக கொண்ட இந்திரன் என்பவரை காதலித்து கரம்பிடித்தார்.

காதல் மலர்ந்தது எப்படி?

கனடாவை சேர்ந்த மேஜிக் உட் நிறுவனத்தின் உரிமையாளர் இந்திரன் பத்மநாதன்.

இந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக ரம்பா நியமிக்கப்பட்டார், அப்போது இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

தனது விருப்பத்தை ரம்பாவிடம் முதலில் கூறி சம்மதம் பெற்று, அவர்களது குடும்பத்தினரின் சம்மதத்தையும் பெற்றார் இந்திரன்.

மிகவும் வித்தியாசமான முறையில் தனது காதலை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக விமானத்தை பறந்துசென்று நடுவானில் ரம்பாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இந்திரனின் அன்பை கண்டு சொக்கிப்போனாராம் ரம்பா, இவர்களது காதலுக்கு இரு குடும்பத்தாரும் பச்சைக்கொடி காட்ட மிக ஜோராக 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின்னர் நடிகை ரம்பா நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு கனடாவில் செட்டில் ஆனார்.

இவர்களுக்கு லாண்யா, சாஷா என இரு பெண் குழந்தைகளும், ஷிவின் என்ற மகனும் உள்ளனர்.

திருமணமாகி சில ஆண்டுகளில் ரம்பா- இந்திரன் கருத்துவேறுபாடால் பிரிந்தாலும் குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒன்றிணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.