லண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்! ஓர் ப்ளாஷ்பேக்

Report
5312Shares

தமிழ் திரைப்பட நடிகர் ஆரி லண்டன் வாழ் ஈழத்து தமிழ்பெண்ணான நதியாவை காதலித்து 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

ஆரி- நதியா தம்பதியினரின் அன்பான வாழ்க்கைக்கு அடையாளமாக ஒரு பெண் குழந்தை உள்ளது.

லண்டன் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நதியா படித்துக்கொண்டிருக்கையில் ஆரி நடித்த மாலைப் பொழுதின் மயக்கத்திலே படத்தினை பார்த்து, அவரது நடிப்பால் கவரப்பட்டுள்ளார்.

ஆரியின் நடிப்பு குறித்து தனது நண்பரிடம் பகிர்ந்திருக்கிறார் நதியா. அதிஷ்டவசமாக நதியாவின் நண்பர் நடிகர் ஆரிக்கும் நண்பர் ஆவார். இதனைத்தொடர்ந்து தனது நண்பரிடம் உதவியுடன ஆரியின் நட்பு நதியாவுக்கு கிடைத்துள்ளது.

ஆரியின் மாலைப் பொழுதின் மயக்கத்திலே படத்தினை பார்த்துக்கொண்டிருந்த நதியா, தனது அம்மாவிடம் நான் இவரைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என விளையாட்டாக கூறியுள்ளார்.

ஆனால் அந்த விளையாட்டான வார்த்தை, உண்மையாகி திருமண பந்தத்தில் இணைவோம் என நதியா அப்போது நினைக்கவில்லை.

ஆரியுடனான நட்புக்கு பிறகு அவரை பத்தி அதிகமாக வீட்டில் பேசிக்கொண்டே இருப்பேன். இது எனது வீட்டில் உள்ள அனைவருக்கும் புரிந்தது. மேலும் எனக்கு தீவிரமாக மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

எனக்கு வரும் மாப்பிளைகளை நான் தட்டிக்கழித்துக்கொண்டே இருந்தேன். இதனை அறிந்த ஆரி, இப்படியே ஒவ்வொரும் பையனையும் தட்டிக்கழித்துக்கொண்டிக்கிறாய், நல்ல பையனாக இருந்தால் திருமணம் செய்துகொள் என என்னிடம் கூறினார், இதற்கு ஏன் நீ என்னை திருமணம் செய்து கொள்ள மாட்டாயா? என நதியா கேட்டுள்ளார்.

சென்னை வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் எல்லாம் வேற. உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுத்துட்டு பின்னாடி வருத்தப்படாதன்னு எனக்கு அறிவுரை கூறினாங்க. நான் அதையெல்லாம் கேட்டுட்டு அவருக்காக சென்னைக்கு சென்றேன் என்கிறார் நதியா.

இதன்பின்னர், இருவீட்டார் பெற்றோர் சம்மதத்துடன் சென்னையில் 2015 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது.

181482 total views