அழகை பார்க்காமல் காதலித்து திருமணம் செய்த பிரபல நடிகைகள்

Report
1097Shares

சினிமா லகில் கொடிகட்டிப் பறந்தபோதே காதலித்து திருமணம் செய்த பிரபல தமிழ் நடிகைகள் பற்றி பார்க்கலாம்.

தேவயானி- ராஜகுமாரன்

90களில் தென்னிந்திய மொழிகளில் உச்சத்தில் இருந்த நடிகைகளில் தேவயானியும் ஒருவர், துணை இயக்குனராக இருந்த ராஜகுமாரன் மீது காதல் வயப்பட, தேவயானியின் வீட்டில் எதிர்ப்பு எழுந்தது, இருப்பினும் பெற்றோர்களை மீறி வீட்டை விட்டு ஓடி வந்து காதல் கணவரை கரம்பிடித்தார்.

குஷ்பு- சுந்தர் சி

தமிழ் திரையுலகில் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் குஷ்புவின் பெயர் நிலைத்திருக்கும், அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர், முறைமாமன் படப்படிப்பின் போது சுந்தர்.சி காதலை வெளிப்படுத்த அவரது வெள்ளந்தியான மனதால் தன் மனதை பறிகொடுத்துவிட்டாராம் குஷ்பு, இருவீட்டாரின் சம்மதத்துடன் நடந்த திருமணத்திற்கு பின், இல்லற வாழ்க்கை இனிமையாய் செல்ல குஷ்புவின் ”ஐ லவ் யூ” மந்திரமும் ஒரு காரணமாம்.

ரோஜா- செல்வமணி

சாதியை மீறி 13 ஆண்டுகள் காத்திருந்து தன் காதலனை மணந்து கொண்டார் நடிகை ரோஜா, செல்வாவின் நற்பண்புகளால் ஈர்க்கப்பட்டாராம் ரோஜா. இவரை ரோஜாவின் அம்மாவுக்கும் பிடித்துப் போக காதலுக்கு ஓகே சொல்லியுள்ளனர், திருமணத்தின் போது செல்வாவின் மார்க்கெட் குறைந்துவிட்ட போதும், பலரும் குழப்பியும் தன் காதலில் உறுதியாய் இருந்த ரோஜா ஆசை நாயகனை மணந்து கொண்டார்.

46354 total views
loading...