பெண்களின் கோபத்தை சமாளிக்க ஆண்கள் இதை செய்து பாருங்கள்..

Report
194Shares

குடும்பத்தில் கணவன் - மனைவிகளுக்கு இடையே ஏற்படும் சில சண்டை, தகராறு ஏற்படுவது இப்போது சகஜமானாலும் அதை சரி செய்ய கணவன் எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்து பிரிவை ஏற்படுத்தும். மனைவி பெரும்பாலும் கோபப்படுவதற்கு முழு காரணம் கணவன் தான். இதை சரி செய்ய இந்த விடயங்களை பின்பற்றினாலே போதும்..

  • சிறு சிறு விடயங்களுக்கெல்லாம் பெண்கள் கோபப்பட்டால் உடனே அதற்கு பதில் கூறாமல் சில நேரம் கழித்து அவர்கள் அமைதியான பின் அன்பாக சொல்லி புரிய வையுங்கள்.
  • ஆண் என்ற ஆளுமையோடு அதிகமாக பேசாமல் அதற்கான நேரம் பார்த்து மனைவியின் விருப்பத்தை என்னவென்று கேட்டு மனதை மாற்றுங்கள்.
  • கணவன் மனைவி செய்யும் தவறினை அடிக்கடி காரணத்தை சொல்லிக் கொண்டே இருக்காமல் அவரின் கோபம் குறைந்த பின்பு செய்தது தவறுதான் என்று ஒப்புக்கொள்ளுங்கள். பின் அதற்கான காரணத்தை கூறலாம்.

  • மனைவி கோபப்படும் நேரத்தில் நீங்களும் கோபப்படாமல் மனதை கட்டுப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் கோபத்தால் அவர்களுக்கு வெறுப்புதான் ஏற்படும்.
  • அதிகமாக பெண்கள் கோபப்படுவதே தன் மீது யாரும் அக்கறை கொள்ளாத சந்தர்ப்பங்களில் தான்.
  • மற்றவர்கள் முன் மனைவியை கேவலமாக பேசுவது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமையாக இருப்பதாக உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடலாம்
  • முடிந்த அளவு மனைவியின் தேவைகளை புரிந்து அதனை பூர்த்தி செய்யுங்கள். அவர்களின் கோபம் தானாகவே நீங்கும்.

  • கணவனும் மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளியுங்கள். மனைவி செய்தவைகள் குறிப்பாக சமையல் உள்ளிட்டவைகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை சாதூர்யமாக கூறலாம்.
  • மனைவியுடன் அனுசரித்து செல்ல கோபப்படும் நேரத்தில், ‘நீ கோபத்தில் கூட அழகாக இருக்கிறாய்?’ என்பது போன்ற வார்த்தைகளை கூறினால் அவர்களுடைய கோபத்தின் அளவு குறைத்துவிடும். மன்னிப்பும் கேட்கலாம்.
7926 total views