ஆண்கள் இப்படி இருந்தால் பெண்கள் கவனிப்பது என்ன...

Report
240Shares

ஆண், பெண் என்ற பேதம் இருக்கிறதா என்ன? என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு, கல்வி, வேலை, குடும்ப பொறுப்பு, சமூக பார்வை என ஆண்களுக்கு நிகராக, அவர்களுக்கும் மேல் பெண்கள் உயர்ந்து நிற்கிறார்கள். ஆனால் மாடர்ன் தலைமுறை ஆண்கள் எந்தெந்த விதத்தில் பெண்களால் விரும்பப்படுகிறார்கள்? எந்தெந்த விதத்தில் வெறுக்கப்படுகிறார்கள் என்பதை இங்கு பார்க்கலாம்...

  • எந்த ஒரு தவறான பார்வையும் இன்றி சகஜமாக பழகுவது, ஆண் நண்பர்களுடன் பழகுவது போன்றே, தங்களிடமும் பழகுவது பிடித்த விஷயமாக பெண்களுக்கு தோண்றும்.
  • ஆண்களிடம் நெருக்கமாக இருக்கும் பெண்ணுக்கு, எந்தவிதமான உதவியாக இருந்தாலும் அதை தயக்கமின்றி செய்பவர்களை பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. தோழிகளுக்கு அப்படி செய்யும் அவர் தன்னையும் சரியாக பார்ப்பார்கள் என்ற எண்ணம் உருவாகும்.
  • பிறருக்கு பெண்களை அறிமுகப்படுத்துவது இந்த காலத்தில் பார்த்திராத விடயம். பெண்கள் வீடுகளை காட்டிலும், ஆண்களின் வீடுகளில் மகனின் தோழிகளை மகளாக ஏற்றுக் கொள்ளும் மனநிலை அதிகரித்துள்ளது.
  • காதல் தோல்வி என்றால் உடனே அந்த பெண்ணின் படத்தை சமூக தளங்களில் பரப்பி அவளை அசிங்கப்படுத்துவது, பெண்கள் பொதுவாக திட்டி, அருவருப்பான வார்த்தைகள் பயன்படுத்தி திட்டுவது போன்றவை.
  • தான் பணிபுரியும் இடத்தில் ஒரு பெண்ணுக்கு கீழே பணிபுரிய மறுப்பது, வெறுப்பது. ஒரு பெண் பதிவி உயர்வு பெற்றாள் என்றால், அவள் தவறான முறையில் தான் அந்த இடத்தை அடைந்திருப்பாள் என கிசுகிசு பேசுவது.
  • சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு சமநிலை அளிக்க ஒன்றும் பலர் தயங்குகிறார்கள். முதல்வர் பெண்ணாக இருப்பினும், நகர அவையில் ஒரு பெண்ணின் பேச்சு எடுத்துக் கொள்ளப்படுகிறதா என்பது தான் கேள்வி. இது சமூகத்தில் உயர்ந்த, தாழ்ந்த எல்லா இடத்திலும் மறுக்கப்படும் ஒரு செயலாகவே தொடர்ந்து வருகிறது.

8278 total views