சிங்கமாக சீறிப்பாய்ந்த நம்ம விஜயகாந்தா இது?... காணொளியால் கண்கலங்கிய ரசிகர்கள்!

Report
361Shares

தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிவிட்டரில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளதால் தொண்டர்கள் குதூகலத்தில் உள்ளனர்.

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேரன்பு கொண்ட பெரியோர்களே தாய்மார்களே, என் உயிரினும் மேலான தமிழ் நெஞ்சங்களே, நாம் முரசு சின்னத்தில் 4 தொகுதிகளில் போட்டிபோடுகிறோம். மக்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்து எங்களை 40 தொகுதியிலும் வெற்றி பெற செய்யவேண்டும் என இருகரம் கூப்பி வேண்டுகிறேன் என கூறியிருக்கிறார். இதனால் தேமுதிக தொண்டர்கள் குதூகலத்தில் உள்ளனர்.

இந்த வீடியோ பதிவை பார்த்த ரசிகர்கள், உங்களது உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் கேப்டன். உங்களை இப்படி பார்ப்பதற்கே கஷ்டமாக இருக்கிறது. பேச முடியாமல் கஷ்டப்பட்டு பேசுகிறார்கள், அரசியல் ஆதாயத்திற்காக உங்களை கஷ்டப்படுத்துகிறார்கள். விரைவில் மீண்டு வாருங்கள் என கூறியுள்ளனர்.

13571 total views