சீறி படமெடுத்த ராஜநாகம்!.. கொஞ்சமும் அசராமல் குரங்கு செய்ததை பாருங்க

Report
833Shares

பாம்பைக்கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி, ஆனால் ராஜநாகம் சீறி படமெடுத்தும் கெத்தாக கொஞ்சமும் அசராமல் சுற்று வளைத்து தாக்கும் குரங்கின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

வனத்துறை அதிகாரியான சுஸந்தா நந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், காட்டில் ஒரு பெரிய ராஜநாக பாம்பு படமெடுத்து சீறி நிற்கிறது. அதன் அருகே ஒரு குரங்கு எதிர்த்து நிற்கிறது.

ராஜநாகம் உயர்ந்து படமெடுத்து தாக்க முயற்சிக்கும்போது அந்த குரங்கு பயப்படாமல் ராஜநாகத்தை சுற்றி வளைத்து தாக்குகிறது.

பாம்பு திரும்புகிற வேகத்துக்கு குரங்கு சுற்றி வந்து தாக்குகிறது. குரங்கின் தாக்குதலில் நிலைகுலைந்துபோன ராஜநாகம் சுருண்டு விழுகிறது.

இறுதியில் ராஜநாகத்தை வென்ற குரங்கு அந்த இடத்தில் இருந்து செல்வது போன்று முடிகிறது.

loading...