துறவிக்கு மகளான ராட்சத பாம்புகள்! எங்கு பார்த்தாலும் கொடிய விஷம்... விழிபிதுங்க வைக்கும் அரிய ஆசிரமம்

Report
604Shares

மியான்மரை சேர்ந்த புத்தமத துறவி ஒருவர் கொடிய பாம்புகளை மகள்களாக பாவித்து வளர்க்கிறார்.

பாம்புகளை வைத்து பல சாகசங்களை நாம் பார்த்திருப்போம். அதிலும் கொடிய விஷம் கொண்ட பாம்புகளின் சாகசங்கள் மனிதர்களிடையே ஒரு வித அச்ச உணர்வையும், வியப்பையும் ஏற்படுத்தும்.

ஆனால், இங்கு ஒரு புத்த துறவியோ, ஆபத்தான பாம்புகளை தன்னுடைய வாரிசுகளாக பாவித்து வருகிறார்.

69 வயதான துறவி விலாதா, வீடுகள் உள்ளிட்ட இடங்களில் பிடிபடும் பைத்தான், வைபர், கோப்ரா உள்ளிட்ட பாம்புகளை வாங்கி வந்து யாங்கூனில் உள்ள ஆசிரமத்தில் வளர்க்கிறார்.

பாம்புகள் கொல்லபடுவதை தடுப்பதற்காகவும், சீன பாரம்பரிய மருந்துக்காகவும் கள்ளசந்தையில் விற்க கடத்தப்படுவதை தடுப்பதற்காகவும், இதுபோல செய்வதாக தெரிவிக்கும் அவர், பாம்புகளை கண்டு அஞ்சாமல் தோளில் மாலையாக போட்டு அமர்கிறார்.

You May Like This Video