கருத்தடை சாதனத்தை கையில் பிடித்தப்படி பிறந்த அழகிய ஆண் குழந்தை! கடும் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன மருத்துவர்கள்

Report
1377Shares

பெண் கருத்தடை சாதனத்தை மீறி கருத்தரித்த ஒரு பெண்ணிற்கு வடக்கு வியட்நாமில் உள்ள ஹைபோங் சர்வதேச மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

அதிசயம் என்னவென்றால் அந்த குழந்தையின் கையில் அவரது தாயின் கருத்தடை சாதனமும் இருந்துள்ளது.

இதனை பார்த்த மருத்துவர் மகப்பேறியல் நிபுணர் டிரான் வியட் பூங் ஆச்சர்யம் அடைந்து, குழந்தை கருத்தடை சாதனத்தை கையில் வைத்திருப்பதை அப்படியே புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் அனைவராலும் ஆச்சர்யத்துடன் பார்க்கப்படுகிறது.

இந்த குழந்தையின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்து, 'இந்த குழந்தை இந்த உலகத்திற்கு தாயின் தோல்வியுற்ற கருப்பை கருவியை (ஐ.யு.டி) பிடித்துக் கொண்டே பிறந்தது’ என்று கூறியுள்ளார்.

மேலும் கருத்தடை சாதனம் குழந்தைக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை மேலும் குழந்தை ஆரோக்கியமாகவும், 3.2 கிலோ எடையுடன் பிறந்துள்ளது.

உலகில் எத்தனையோ குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால், இந்த குழந்தை கருத்தடை சாதனத்தை புறம் தள்ளி பிறந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

loading...