சாலையில் ஓடிய பஸ் திடீரென்று ஏரிக்குள் பாய்ந்ததால் காத்திருந்த அவலம்! வைரலாகும் காட்சி

Report
142Shares

சீனாவில் கைசவ் மாகாணத்தில் சாலையில் சென்ற பேருந்து திடீரென்று ஏரிக்குள் விழுந்ததால் கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.

சாலை விபத்தில் சிக்கிய நிலையில் அந்த பேருந்து ஹாங்ஷான் என்ற ஏரியில் பாய்ந்துள்ளது.

மேலும், 15 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

சீனாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவமழையால் பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால், கடந்த வெள்ளி கிழமை வரை சீனா முழுவதும் 119 பேர் பலியாகியோ அல்லது காணாமலோ போயுள்ளனர் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஏரியில் பேருந்து மூழ்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

loading...