தொடர் மரணங்கள்!... மரண பீதியில் மக்கள்- இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் செல்லுங்கள்

Report
189Shares

உலக நாடுகளை இன்று அச்சுறுத்தி கொண்டிருக்கும் மிகப்பெரிய ஆயுதமாக மாறியிருக்கிறது கொரோனா வைரஸ்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் நபர் ஒருவருக்கு இந்த நோய் ஏற்பட, தற்போது வரை 1700க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருபது நாட்களுக்குள் தாய்லாந்து, ஜப்பானில் இந்த நோய் வேகமாக பரவி இருப்பதால் மற்ற நாடுகளும் அச்சத்தில் உறைந்துள்ளன.

கொரோனா வைரஸ் என்பது என்ன?

மெர்ஸ் மற்றும் சார்ஸ் இரண்டும் கலந்த கலவையே, இந்த கொரோனா வைரஸ் ஆகும். சாதாரண சளி, இருமல் பிரச்சனையை போலதான் இதன் அறிகுறி இருக்கும் என்றும்,

உரிய முறையில் கண்டறியப்படாவிட்டால், மெல்ல, மெல்ல பாதிப்பு அதிகமாகி, உயிரை கொல்லும் ஆபத்தை உடையது என்றும் மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.

முதலில் எதை தாக்கும்?

நுரையீரலை முதலில் தாக்கும் இந்த வைரஸின் முதல் அறிகுறி லேசான காய்ச்சலே.

2 முதல் 7 நாட்களுக்கு வறட்டு இருமல், தொடர்ந்து மூச்சவிடுவதில் சிரமம் இருக்கும்.

நாளடைவில் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு சிறுநீரகம் செயலிழந்து மரணத்தை ஏற்படுத்துமாம்.

எப்படியெல்லாம் பரவும்?

காற்றில் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் ஒரே நேரத்தில் பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

நோயாளி இருமினாலோ, சளியை துப்பினாலோ, தும்மினால் கூட காற்றில் வேகமாக பரவிவிடும் ஆபத்தான வைரஸ்.