எலும்பு தோலுமாக பரிதாப நிலையில் சிங்கங்கள்!... கண்ணீர் வரவழைக்கும் புகைப்படங்கள்

Report
462Shares

கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் சிங்கங்களின் புகைப்படங்கள் வெளியாகி பார்ப்போரின் கண்களை குளமாக்குகின்றன.

சூடானின் தலைநகரில் அமைந்துள்ளது அல்குரேஷி விலங்கியல் பூங்கா, இங்கு ஐந்து சிங்கங்கள் வளர்க்கப்படுகின்றன.

கடந்த சில வாரங்களாக போதிய நிதி இல்லாததால் சிங்கங்களுக்கு தேவையான உணவை வழங்க முடியாமல் ஊழியர்கள் அவஸ்தைப்படுகின்றனர்.

இதனால் அவைகள் எலும்பு தோலுமாக காட்சியளிக்கின்றன, பூங்காவுக்கு சென்ற பார்வையாளர்கள் சிலர் இந்த புகைப்படங்கள் வெளியிட இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதுமட்டுமின்றி சூடானின் மற்ற பூங்காக்களின் நிலையும் மோசமானதாக இருப்பதாக கூறப்படுகிறது.

16621 total views