வெறும் 14 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு பேரதிர்ச்சி! ஆணாக மாறிய மனைவி- வெளிவரும் பகீர் தகவல்கள்

Report
190Shares

கென்யாவில் திருமணமான இரண்டு வாரத்தில் தன்னுடைய மனைவி ஆண் என்பதை அறிந்ததால் அதிர்ச்சியில் உறைந்துள்ளார் அவரது கணவர்.

கென்யாவின் காயூன்கா கிராமத்தை சேர்ந்தவர் Mohammed Mutumba, அங்குள்ள பள்ளிவாசலில் இமாமாக பணிபுரியும் Mutumba திருமணத்திற்காக பெண் பார்த்து வந்துள்ளார்.

இதை அறிந்து கொண்ட நபர் ஒருவர், பெண்ணாக நடித்து Mutumbaவிடமிருந்து பணத்தை அபகரிக்க திட்டமிட்டார்.

இதன்படி தன்னுடைய பெயரை Swabullah Nabukeera என அறிமுகப்படுத்திக் கொண்டதுடன் Mutumbaவை திருமணமும் செய்து கொண்டார்.

ஆனால் திருமணம் முடிந்து நடக்கும் சடங்குகளுக்கு அவர் சம்மதிக்கவில்லை, தனக்கு மாதவிடாய் இருக்கிறது என கூறியுள்ளார்.

இந்நிலையில் Mutumbaயின் பக்கத்து வீட்டுக்காரர், தன்னுடைய வீட்டில் திருடு போய் விட்டதாகவும், Nabukeera சுவர் ஏறி குதித்ததை தான் பார்த்ததாகவும் கூறி பொலிசில் புகாரளித்து விட்டார்.

இதனையடுத்து Nabukeeraவிடம் பொலிசார் விசாரணை நடத்தியதில், அவர் உண்மையிலேயே ஆண் என்பது தெரியவந்தது.

மேலும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு Mutumbaயிடமிருந்து தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததும், இதற்கு அவரது அத்தை திட்டமிட்டுக் கொடுத்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து இவரை கைது செய்து சிறையில் அடைத்த பொலிசார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

loading...