காது வலியால் அவதிப்பட்ட இளைஞர்!... மருத்துவர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி

Report
38Shares

சீனாவில் காதுவலியால் கடுமையாக அவதிப்பட்ட இளைஞர் பொறுக்க முடியாமல் மருத்துவரை நாடியவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

சீனாவில் தூக்கத்தில் இருந்த இளைஞர் ஒருவர் காது வலியால் திடுக்கிட்டு எழுந்து அவதிப்பட்டுள்ளார்,

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அந்த இளைஞரின் காதுக்குள் பரிசோதித்துள்ளனர். அப்போது கரப்பான் பூச்சி ஒன்றை அவர்கள் கண்டுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் உடனடியாக மருத்துவரை நாடியுள்ளார். ஆனால் அந்த இளைஞரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

விரிவான பரிசோதனையில் அந்த இளைஞரின் காதுக்குள் இருந்து கூட்டம் கூட்டமாக கரப்பான் பூச்சிகளை வெளியே எடுத்துள்ளனர் மருத்துவர்கள்.

சுமார் பத்துக்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சி குட்டிகளை அந்த 24 வயது இளைஞரின் காதுக்குள் இருந்து வெளியே எடுத்துள்ளனர்.

எத்தனை நாட்களாக அந்த இளைஞரின் காதுக்குள் கரப்பான் பூச்சி குடியிருந்தது என்பது தொடர்பில் தகவல் ஏதும் இல்லை.

ஆனால் அவர் படுக்கை அருகே இருந்த உணவு பண்டங்களில் இருந்து கரப்பான் பூச்சி ஒன்று இவரது காதுக்குள் நுழைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

(AsiaWire)
loading...