இறந்தவரின் சடலத்தை வைத்து கொண்டு விழுந்து விழுந்து சிரித்த உறவினர்கள்! இறுதிச் சடங்கில் நடந்த விசித்திரம்! வைரலாகும் காட்சி

Report
309Shares

அயர்லாந்தில் லீனெஸ்டர் மாகாணத்தில் உள்ள கில்கென்னி நகரை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் அண்மையில் உடல்நல குறைவால் காலமானார்.

தான் இறந்த பின்னர் யாரும் அழக்கூடாது, சிரிக்க வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் அவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட உறவினர்கள் சிரித்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இறப்பதற்கு முன்பாக தன் கடைசி ஆசையை தனது உறவினர்களிடம் ”தனது உடலை அடக்கம் செய்யும்போது, உறவினர்கள் யாரும் அழக்கூடாது என்றும், மாறாக வாய்விட்டு சிரிக்க வேண்டும்” என்று பிராட்லி கூறியிருந்தார்.

இதோடு மட்டுமல்லாமல் தனது இறுதிச்சடங்கில் உறவினர்களை சிரிக்கவைப்பதற்கான ஏற்பாட்டையும் அவர் பின்னணியில் செய்திருந்தார். அதன்படி தனது குரலில் ஆடியோ ஒன்றை பதிவு செய்து அவரின் மகளிடம் கொடுத்துள்ளார்.

ஷே பிராட்லியின் இறுதிச்சடங்கின் போது, அவரது சவக்குழிக்கு அருகில் ஒலிப்பெருக்கி மூலம் அந்த ஆடியோவை ஆன்டிரியா ஒலி பரப்பினார். அதில், “நான் எங்கே இருக்கிறேன்? இது மிகவும் இருட்டாக இருக்கிறது. என்னை வெளியே விடுங்கள்” என ஷே பிராட்லி பேசியிருந்தார்.

இதை கேட்டு அங்கு கூடியிருந்த ஷே பிராட்லியின் உறவினர்கள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

loading...