விமானத்தின் எஞ்சினில் பயணித்த நபர்... அலறித்துடித்த பயணிகள்! தீயாய் பரவும் காட்சி

Report
765Shares

உலகில் செல்பி மோகத்திற்கு அடிமையாகி வரும் மனிதர்கள் அதிகரித்து வரும் நிலையில் நைஜீரிய நாட்டு இளைஞர் ஒருவர் பறக்கவிருந்த விமானத்தின் இஞ்சினில் ஏறி சாகசம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு முர்டலா முகமது ஏர்போர்டில் இருந்து, ஆஸ்மாம் விமானம் ஒன்று பறக்க தயாராக இருந்தது. அப்பொழுது ஒரு இளைஞர் விமானத்தின் ஒரு பக்க இறக்கையில் கீழே உள்ள, எஞ்ஜினைப் பிடித்த படியே தொங்கிக் கொண்டிருந்துள்ளார். இதை விமானத்திற்குள் இருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டதை அடுத்து இக்காட்சி தற்போது வைரலாக வருகின்றது.

பின்னர் குறித்த இளைஞரை மெதுவாக கீழே இறக்கியுள்ளனர். ஆனால் அடையாளம் காண முடியவில்லையாம். குறித்த சம்பவத்தினால் பயணிகள் பீதியடைந்தது மட்டுமின்றி விமானம் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

24537 total views