50 வருடங்களாக கடற்கரை மணலில் புதைந்து கிடந்த சுவாரஷ்ய பரிசு! 9 வயது சிறுவனுக்காக காத்திருந்த ஆச்சரியம்?

Report
214Shares

தெற்கு ஆஸ்திரேலியாவின் ஐரே தீபகற்பத்தில் உள்ள டாலியா கடற்கரையில் அப்பாவுடன் மீன் மிடிக்க சென்ற சிறுவனுக்கு ஓர் அதிசய பரிசாக 50 வருடங்களுக்கு முன்னர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

எலியட் என்ற ஒன்பது வயது சிறுவன் கடற்கரை மணலில் பாட்டில் ஒன்று புதைந்துக் கிடப்பதை அவதானித்து எடுத்துள்ளார்.

அதனை பிரித்து பார்த்த போது, அதில் ஒரு கடிதம் இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த கடிதத்தில் மேற்பகுதியில் நவம்பர் மாதம் 17ம் திகதி, 1969ம் ஆண்டு என இருந்துள்ளது.

கடிதத்தை மேலும் படித்தபோது அந்த கடிதம், 'இங்கிலாந்தில் இருந்து மெல்போர்னுக்கு குடிபெயர்கிறேன். கப்பலில் இருந்து கடிதத்தை எழுதுகிறேன்.

யார் இந்த கடிதத்தை பெறுகிறீர்களோ, அவர்கள் இந்த கடிதத்திற்கு பதில் அனுப்புங்கள்' எனும் செய்தியை தாங்கி வந்திருந்தது.

இதனையடுத்து அந்த கடிதத்தை எழுதிய கில்மோரோவுக்கு, எலியட் தற்போது பதில் கடிதம் அனுப்பியுள்ளான்.

இந்த கடிதத்தை கில்மோரோ எழுதும்போது அவருக்கு 13 வயதே ஆனது. இப்போது அவருக்கு 63 வயதாகிவிட்டது. இவர் மீண்டும் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

7579 total views