8 வயதில் கற்றுக்கொண்ட ட்ரிக்... தற்போது கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இளம்பெண்

Report
386Shares

பெண் ஒருவர் தனக்கு தெரிந்த அமெரிக்கன் சைகை மொழியை சரளமாக பேசுவதை வை்த்து ஒவ்வொரு மாதமும் £7000 சம்பாதித்து வருவது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மொழியை பள்ளியில் ஒரு பாடமாக இவர் படித்தார். ப்ளோரிடாவில் வசித்து வருபவர் கிறிஸ்டல் ரிவர்ஸ் . இவர் மாதம் £7000 சம்பாதிக்கிறார். இவர் அமெரிக்க சைகை மொழியை சரளமாகப் பேசக் கூடியவர். இந்த மொழியை அவர் பள்ளியில் பாடமாகப் பயின்றவர் தனது எட்டு வயது முதல் காது கேளாதவர்களிடம் சரியான முறையில் தொடர்பு கொள்வதற்காக இந்த மொழியை அவர் கற்று வந்துள்ளார்.

வெப் கேமரா மூலம் ஆன்லைனில் தொடர்பு கொள்ளத் தொடங்கினார். டிஸ்னியில் அவர் பணியில் இருக்கும்போது இந்த ஆற்றலை அவர் பயன்படுத்திக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் வெப் கேமராவில் அவரின் சைகை மொழியைப் பதிவு செய்யத் தொடங்கினார். சில மாதங்களுக்குப் பிறகு தனது வீடியோவை ஒளிபரப்பத் தொடங்கினார். இதனைக் கண்ட ஒரு காது கேளாதவர் இவருடைய மொழிப் புலைமை பற்றி கேட்டறிந்தார்.

அவர் தனது பார்வையாளர்களுடன் ஊடாடும் முயற்சியில் இறங்கினார். தன்னைப் பின்பற்றுகிறவர்கள் மற்றும் தனது விசிறிகளுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளள வேண்டும் என்று விரும்பினார். உட்கார்ந்தபடி டைப்பிங் மற்றும் சாட்டிங் செய்வதை விட நேரடி தொடர்பில் பேசுவது இன்னும் ஆர்வத்தை அதிகரிக்கும் என்று நம்பினார். கிறிஸ்டல் பெரும்பாலும் தனது சொந்த செயல்பாடுகளை கேமராவில் பதிவிட்டு வெளியிட்டார். சில நேரங்களில் தனது வாழ்க்கை பற்றி பேசுவது, தனக்கு பிடித்த பொழுதுபோக்கை செய்வது, விளையாடுவது, நடனமாடுவது, போன்றவற்றை ஆன்லைன் ஸ்ட்ரீமிங் செய்தார்.

வெப் கேமரா பயன்படுத்துவதை நிறுத்த விரும்பவில்லை. அவர் தனது எதிர்கால திட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, வெப் கேமரா மூலம் அனைவரையும் சந்திப்பதை நிறுத்தப் போவதில்லை என்று கூறினார். இதனால் அவருக்கு ஒவ்வொரு மாதமும் நல்ல வருமானம் கிடைப்பதாகவும், இதனை விட முக்கியமாக இந்த வேலை அவரை மிகவும் மகிழ்விப்பதாகவும் கூறினார். இருப்பினும் இந்த செயல்பாடுகளால் அவர் சில விமர்சனங்களை எதிர்கொண்ட போதும் இந்த வேலை அவருக்கு மன மகிழ்ச்சியைத் தருவதால் ஓருபோதும் இதனை விடப்போவதில்லை என்று கூறினார்.

11585 total views