தாய் கொடுத்த ஒரே ஒரு கப் கஞ்சி.... துடிதுடிக்க உயிரிழந்த 2 வயது சிறுவன்!... சாப்பாட்டில் கலந்தது விஷம் அல்ல வேற...
ரஷ்யாவைச் சேர்ந்த Yana Deinesh என்ற 25 வயது பெண் ஒருவர் தனது இரண்டு வயது மகனை உணவில் அதிகமான உப்பை சேர்த்து கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தாயின் வேலைப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் தனது குழந்தையினை அவரால் கவனிக்க முடியாத காரணத்தினால் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்பாக தனது குடும்பத்தினர் முன்னிலையில் குழந்தையை பெல்ட்டால் தாக்கியுள்ளார். தற்போது குடும்பத்தில் யாரும் இல்லாத தருணத்தில் ஒரு பவுல் கஞ்சிக்கு 50 கிராம் உப்பை சேர்த்து அக்குழந்தைக்கு கொடுத்துள்ளார்.
ஆரம்பத்தில் சாப்பிட மறுத்த குழந்தை குறித்த தாயின் கொடூர செயலினால் வேறு வழியின்றி சாப்பிட்டுள்ளது. சாப்பிட்ட சில மணித்தியாலங்களில் சிறுவனின் உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது.
உடனே குடும்பத்தினர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துள்ளது. அப்பொழுது தான் மருத்துவர் இந்த அதிர்ச்சி சம்பவத்தினை கூறியுள்ளார்.
குழந்தை சாப்பிட்ட உணவில் சாதாரண அளவை விட 60 மடங்கு அதிகமாக உப்பு சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பின்பு பொலிசாரால் கைது செய்யப்பட்ட தாய் தனது செய்த தவறை ஒப்புக்கொண்டுள்ளார். குறித்த செயலுக்கு அவருக்கு 14 வருடம் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.